English (United Kingdom)Sinhala (Sri Lanka)

CA Sri Lanka

    Font size
  • Increase font size
  • Decrease font size

செய்முறைப் பயிற்சி

தொழில்சார்ந்த ஒருவரின் திறன்களையும், திறமைகளையும் கட்டியெழுப்பும் விடயத்தில் செய்முறைப் பயிற்சி முக்கியமான சேவையை ஆற்றுகிறது. ஆகவே தொழில் ரீதியான பயிற்சிக்கு சம்பந்தப்பட்ட தேவைகளை நிறைவேற்றுவது பட்டயக் கணக்காளராவதன் அத்தியாவசிய அம்சமாகும்.

கற்கை காலத்தல் மாணவர் ஒருவர் அல்லது மாணவி ஒருவர் பெற்றுக்கொள்கின்ற மூன்றாண்டு செயல்முறைப் பயிற்சி நமது நிறுவனத்தில் இருந்து பெற்றுக்கொள்கின்ற தகைமைகளில் மிகவும் முக்கியமானதும் தனித்துவமானதுமான ஓர் அம்சமாகும். பட்டயக் கணக்காளர்களின் சர்வதேச மகாநாட்டில் (IFAC) சர்வதேச கல்விப் பயன்பாடு தொடர்பான வெளியீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள திறமைகளை அடிப்படையாகக் கொண்ட தரங்களை இணங்கி ஒழுகக்கூடிய வகையில் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் பதிவு செய்யப்பட்டுள்ள மாணவ மாணவிகளின் செயல்முறைப் பயற்சியின் தரத்தையும் ஏற்புடைத் தன்மையையும் சான்றுப்படுத்துவதற்காக செயல்முறைப் பயிற்சித் தேவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. குறித்த பரீட்சையில் சித்தியடைவதுடன் அங்கீகரிக்கப்பட்ட செயல்முறைப் பயிற்சி தேவைகளை நிறைவேற்றுகின்ற எந்த ஒரு மாணவனும் அல்லது மாணவியும் நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்கும் நிறுவனம் சார்ந்த அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் விண்ணப்பிக்க தகைமைப் பெறுகின்றார்.

பரிந்துரை செய்யப்பட்ட பயிற்சிக் காலமும் சம்பந்தப்பட்ட பயிற்சி நிலைகளும்
குறைந்தபட்சம் ஆண்டொன்றிற்கு வேலை செய்கின்ற 220 நாட்கள் இருக்க வேண்டும் என்ற அடிப்படைக்கு உட்பட்டு, மூன்று வருட பயிற்சியை பயிற்சி பெறுகின்ற மாணவ மாணவிகள் பூர்த்தி செய்ய வேண்டும்.

முழுமையான செயல்முறை பயற்சிக் காலம் இரண்டு நிலைகளாக பிரிக்கப்படுகின்றது.

1. சான்றிதழ் நிலையிலான பயிற்சி – உள்ளுறை I
2. மூலோபாய நிலையிலான பயிற்சி
2.1 மூலோபாய நிலை I – உள்ளுறை II
2.2 மூலோபாய நிலை II – உள்ளுறை III

மேற் குறிப்பிட்ட பயிற்சி நிலைகள் இரண்டையும் வெவ்வேறாக கையொப்பமிடுகின்ற இரண்டு பயிற்சி உடன்படிக்கைகள் மூலம் காப்பீடு செய்யப்படுதல் வேண்டும். எவ்வாறாயினும் தேவைப்பட்டால் இரண்டு நிலைகளையும் ஒர் உடன்படிக்கையில் காப்பீடு செய்ய முடியும்.

செயல்முறைப் பயிற்சியை வழங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள்
அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றன.

கணக்காய்வு நிறுவனம் - தொழிலில் ஈடுபடுகின்ற பட்டயக் கணக்காளர்களின் கம்பனி மற்றும் கணக்காய்வாளர் நாயகத்தின் திணைக்களம்
கணக்காய்வு அல்லாத நிறுவனம் - கணக்காய்வு நிறுவனமாக வகைப்படுத்தப்படாத ஏனைய அனைத்து பயிற்சி நிறுவனங்கள்.

பயிற்சிக்காக பரிந்துரை செய்யப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் 1000த்திற்கு மேல் இருக்கின்றன.

சான்றிதழ் மற்றும் மூலோபாய நிலைகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் குறிக்கப்பட்டுள்ள பட்டியல் இணையத்தளத்திலும் நூலகத்திலும் பரிசீலனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்களும் பயிற்சி சந்தர்ப்பங்களும்

அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனத்தில் சேவையாற்றுவதன்மூலம் உரிய செயல்முறைப் பயிற்சியை பூர்த்தி செய்ய வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் இணையத்தளத்தில் காட்டப்பட்டுள்ளன.

பயிற்சி வசதிகளுக்காக பின்வரும் நிறுவனங்களுக்கு நேரடியாக விண்ணப்பங்களை மாணவ மாணவிகள் சமர்ப்பிக்க முடியும் இன்றேல் பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் மாணவ சேவை பிரிவின் ஊடாக பயிற்சிக்காக விண்ணப்பிக்க முடியும். செயல்முறை பயிற்சி தொடர்பாக அடிக்கடி தோன்றுகின்ற சிக்கல்களின் மூலம் பயிற்சி வாய்ப்புகளை கோர முடியும்

அடிக்கடி கேட்கும் வினாக்கள் – செயல்முறைப் பயிற்சி

செயல்முறைப் பயிற்சி பட்டயக் கணக்காளராவதற்காக உரிய இலங்கை பட்டயக் கணக்காளர் சங்கத்தின் பாட திட்டத்தில் அவசியமான ஒரு அம்சமாகும்.

ஆகவே, நிறுவனம் வழங்குகின்ற சான்றிதழைப் பெற்றுக்கொள்வற்காக தகைமை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட பரீட்சையுடன் விசேட பயிற்சித் தேவைகளை மாணவ மாணவிகள் பூர்த்தி செய்ய வேண்டும்.

நிறுவனம் வழங்குகின்ற சான்றிதழ்கள் வருமாறு: கணக்கீட்டு, வியாபார சான்றிதழ் (CAB) கணக்கீடு மற்றும் வியாபாரம் தொடர்பான டிப்ளோமா (DAB), அங்கத்துவம் சார்ந்த (ACA) மற்றும் பயிற்சிக்கான சான்றிதழ் (Certificate to Practice)

கற்கை நடவடிக்கைகளுடன் செயல்முறைப் பயிற்சியை ஒரே நேரத்தில் பெற்று, செயல்முறை பயிற்சியின்மூலம் பெறுகின்ற தொழில்சார் திறமைகளை கற்கை நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திக்கொள்வதற்கும், கற்கை நடவடிக்கைகளிலிருந்து பெறுகின்ற அறிவை செயல்முறை பயிற்சிக்கு பயன்படுத்திக்கொள்வதற்கும் சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொள்ளும்படி மாணவ மாணவிகளுக்கு தூண்டுதல் அளிக்கப்படுகின்றது.

மாணவராக பதிவு செய்யப்பட்ட சந்தர்ப்பத்திலேயே மாணவ மாணவிகளுக்கு செயல்முறைப் பயிற்சியை பெற்றுக்கொள்வதை ஆரம்பிக்க முடியும். மாணவ மாணவிகள் தமது பட்டயக் கணக்காளர் பரீட்சைகளை ஆரம்பித்தவுடன் சம்பந்தப்பட்ட செயல் முறைப் பயிற்சியை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட செய்முறைப் பயிற்சிக்கு உரிய பொதுவான கால பரப்பெல்லை கீழே காட்டப்பட்டுள்ளது.

பாடநெறி பயிற்சி நிலை பூர்த்திசெய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்ட காலம் செய்துகொள்ள வேண்டிய பயிற்சி உடன்படிக்கை
11224 உள்ளுறை I சான்றிதழ் நிலை 1 வருடம் (வருடத்திற்கு வேலைசெய்யும் நாட்கள் 220) சான்றிதழ் நிலை (ஒரு வருடம்)
19324 உள்ளுறை II மூலோபாய நிலை I 1 வருடம் (வருடத்திற்கு வேலைசெய்யும் நாட்கள் 220) மூலோபாய நிலை (02 வருடங்கள்)
25424 உள்ளுறை III மூலோபாய நிலை II 1 வருடம் (வருடத்திற்கு வேலைசெய்யும் நாட்கள் 220)

மூலோபாய நிலை - I மற்றும் II, இரண்டு ஆண்டுகளுக்கு கையொப்பமிடப்பட்ட ஒர் உடன்படிக்கையின் கீழ் முடிக்க வேண்டும்.

பரீட்சை பயிற்சி மட்டமும் பூர்த்திசெய்ய வேண்டிய கால எல்லையும்
CAB I பயிற்சி கட்டாயமிலலை
CAB II பயிற்சி கட்டாயமிலலை
DAB/மூலோபாய நிலை I பயிற்சி கட்டாயமிலலை
மூலோபாய நிலை II கணக்கீடு மற்றும் வியாபாரம் தொடர்பான சான்றிதழுக்கு* தகைமை பெற்றதன் பின்னர் மூலோபாய நிலை I பயிற்சியைப் (220 நாட்கள்) பூர்த்திசெய்தல்.
பரீட்சைகள் : CAB - கணக்கீடு மற்றும் வியாபார சான்றிதழ்
DAB - கணக்கீடு மற்றும் வியாபார டிப்ளோமா

* CIMA அங்கத்தினர்களுக்கும் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் கணக்கீடு மற்றும் / அல்லது நிதி தொடர்பான முழுநேர விரிவுரையாளர்களாக சேவையாற்றுகின்றவர்களுக்காக பயிற்சி சந்தர்ப்பங்களைப் பூர்த்திசெய்யாமல் மூலோபாய நிலை II பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனுமதியில்லை.

குறித்த பரீட்சையையும் செய்முறைப் பயிற்சியையும் பூர்த்திசெய்கின்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் நிறுவனம் வழங்குகின்ற பின்வரும் சான்றிதழ்களைக் கோருவதற்கு உரிமை உண்டு.

சான்றிதழ் தேவையான தகைமைகள்
பரீட்சை பயிற்சி
கணக்கீடு மற்றும் வியாபார சான்றிதழ் - (CAB) CAB I மற்றும் CAB II உடன் வியாபார ஆங்கிலம் II சான்றிதழ் நிலையிலான பயிற்சி (உள்ளுறை I) அல்லது AAT பயிற்சிக்காக விடுவித்தல்
கணக்கீடு மற்றும் வியாபார டிப்ளோமா - (DAB) DAB உடன் வியாபார ஆங்கிலம் III - பகுதி I அல்லது விடுவித்தல் மூலோபாய நிலை I (உள்ளுறை II)
சார்புடைய பட்டய கணக்காளர் - (ACA) Top CA சம்பவ கற்கையுடன் வியாபார ஆங்கிலம் III இரண்டாம் பகுதியும் நேர் காணலும் (Viva -Voce) மூலோபாய நிலை II (உள்ளுறை III)
தொழிலில் ஈடுபடுவதற்கான சான்றிதழ் ACA அங்கத்துவம் கணக்கீடு மற்றும் வியாபாரம் தொடர்பான டிப்ளோமாவுக்கான தகைமைகள் கிடைத்ததன் பின்னர் கணக்காய்வு பிரிவின் நிறுவனமொன்றில் வேலை செய்யும் 440 நாள் மூலோபாய நிலை பயிற்சி.

* மேற்குறிப்பிட்ட சான்றிதழ் சபையின் அங்கீகாரத்துடன் வழங்கப்படும்.

கணக்காய்வு பிரிவிலும் கணக்காய்வு அல்லாத பிரிவிலும் சான்றிதழ் மற்றும் மூலோபாய நிலைகளுக்குரிய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் பட்டியல்களுக்கு www.casrilanka.com இணையத்தளத்துக்குள் பிரவேசிக்கவும்.

செயல்முறைப் பயிற்சியைப் பெற்றுக்கொள்வதற்கு விரும்பும் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கு நிறுவனம் அங்கிகரித்த கணக்காய்வு பிரிவின் நிறுவனமொன்றை அல்லது கணக்காய்வு அல்லாத பிரிவு நிறுவனமொன்றை அந்நிறுவனங்களுக்கு நேரடியாக விண்ணப்பித்து தேடிக்கொள்ள முடியும். மேலும், நிறுவனத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பின்வரும் வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்கும் வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் இணையத்தளத்தில் Students homepage கீழ் Apply for Jobs அழைப்பதன்மூலம் மாணவ மாணவிகளுக்கு நேரடியாக விண்ணப்பிக்க முடியும்.

Student login (user ID: Reg.no Password: password)
Training job (If there is any vacancy it will appear – வெற்றிடங்கள் இருப்பின் இங்கு காட்டப்படும்.)
Apply (Edit your profile – தமது தகைமைகளைக் காட்டுக)
Send

இணையத்தள வசதிகள் இல்லாத மாணவ மாணவிகளுக்கு பயிற்சி பிரிவில் உள்ள விசேட கணனியின் ஊடாக தமது சுயவிபரக் கோவையைச் சமர்ப்பிப்பதோடு அதன் வன் பிரதியை (Hard Copy) சமர்ப்பிக்க முடியும். இவ்வாறு சமர்ப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களின் சுயவிபரக் கோவை அங்கத்தினர்கள் அறிந்துகொள்வதற்காக நிறுவனத்தின் இணையத்தளத்தின்மூலம் காலத்திருத்தம் செய்யப்படும். வெற்றிடங்கள் இருப்பின் அம் மாணவ மாணவிகள் நேர்முகப் பீட்சைக்கு அழைக்கப்படுவார்கள்.

(சுயவிபரக் கோவை மூன்று மாதங்கள் வைத்துக்கொள்ளப்படும்)

பயிற்சி ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் நீங்கள் மேற்பார்வை அங்கத்தினர் (Supervising Member) மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் பயிற்சி உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ள வேண்டும். அத்துடன் அவ்வுடன்படிக்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தில் பதிவுசெய்யப்படுதல் வேண்டும். செல்லுபடியான உடன்படிக்கையின்றி பெறுகின்ற பயிற்சி நிறுவனம் குறித்தொதுக்குகின்ற செய்முறை பயிற்சி தேவைகளின் கீழ் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

As soon as a student joined with an Approved Training Organization the Supervising Member of that respective organization should send a letter to the Institute requesting the set of blank agreement.

Public practice organizations (Audit Sector): should request the agreement with a covering letter in a company letter head.

கணக்காய்வு செய்யப்படாத நிறுவனத்தினால் கம்பனியின் கடிதத் தலைப்புள்ள கடிதத்தின் மூலம் உடன்படிக்கைகளின் பிரதிகளைக் கோர வேண்டும். அத்துடன் பயிற்சித் திட்டத்தையும், பயிற்சி வழங்கும் பிரிவையும் உள்ளடக்கிய மாதிரியையும் (rotation) அனுப்ப வேண்டும்.

பயிற்சி நிகழ்ச்சியையும் மாதிரி படிவத்தையும் தரவிறக்கம் செய்துகொள்க

அடிப்படை தகைமைகளைப் பூர்த்திசெய்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு ஒவ்வொரு உடன்படிக்கைகளின் நிரப்பப்படாத பிரதிகள் வழங்கப்படும். அதன் பின்னர் செல்லுபடியான பயிற்சி உடன்படிக்கை என்றவகையில் பதிவுசெய்வதற்காக நிறுவனம் விசேடமாகக் காட்டியள்ள கட்டணத்தைச் செலுத்தியதாகக் குறிக்கப்பட்டுள்ள பற்றுச் சீட்டுடன் பொருத்தமானமுறையில் நிரப்பப்பட்ட உடன்படிக்கை பிரதியை பயிற்சிப் பிரிவுக்கு கையளிக்க வேண்டும்.

  • மாணவனின் அல்லது மாணவியின் பதிவு இலக்கம் மற்றும் பதிவேட்டில் உள்ளவாறு முழுப்பெயர்
  • எதிர்பார்க்கப்படும் மேற்பார்வை அங்கத்தவரின் பெயர், பதவி மற்றும் அங்கத்துவ இலக்கம்.
  • எதிர்பார்க்கப்பட்ட பயிற்சி நிலை மற்றும் பயிற்சி ஆரம்பமாகும் திகதி.
  • பயிற்சியளிக்கும் நிறுவனத்தின் பெயர் மற்றும் பயிற்சியளிக்கும் பிரிவு, பிரிவுகள்.
  • பயிற்சி பெறுபவர் மற்றும் மேற்பார்வை அங்கத்தினரைத் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய முறைபற்றிய தகவல்கள்.
  • ஏற்புடையதாக இருப்பின், பயிற்சியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதற்கு சாட்சி சமர்ப்பிக்க வேண்டும். மேற் குறிப்பிட்ட தகவல்களுக்கு மேலதிகமாக கணக்காய்வு செய்யப்படாத பிரிவின் நிறுவனத்தினால் பின்வரும் ஆவணங்கள் மேற்பார்வை அங்கத்தினரின் கையொப்பத்துடன் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
  • உத்தேச பயிற்சித் திட்டத்தின் மாதிரி
  • பயிற்சி வழங்குகின்ற பிரிவு தொடர்பான விபரங்கள் அடங்கிய மாதிரி படிவம்
  • பயிற்சி பெறுபவரின் பயிற்சி நிலையத்தின் முகவரியும் மேற்பார்வை அங்கத்தினர் சேவையாற்றுகின்ற இடமும் அவ்விருவரின் நிறுவன ரீதியான தொடர்புகளைக் காட்டுகின்ற கடிதமொன்றைச் சமர்ப்பிக்க வேண்டும். கணக்காய்வு செய்யப்படுகின்ற பிரிவு மற்றும் கணக்காய்வு செய்யப்படாத பிரிவு ஆகிய இருதரப்பிலும் உடன்படிக்கைக்காக அந்நிறுவனங்களின் கடிதத் தலைப்புடனான கடிதத்தில்  மாத்திரம் கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பயிற்சி நிறுவனத்தில் இணைகின்ற முதல் நாளிலிருந்து நான்கு மாதங்களுக்கு மேற்படாத தகுதிகாண் (Probation) காலத்தை பயிற்சிக் காலத்துடன் சேர்த்துக்கொள்ள முடியும்.

மாணவர் உச்ச மாணவ உடன்படிக்கைக்கு வருவதற்கு முன்னர் பயிற்சியை ஆரம்பித்திருந்தால், குறித்த பயிற்சியை ஆரம்பிக்கின்ற திகதியை நான்கு மாத காலவரையறைக்குட்பட்டு பின்தேதியிடும்படி, மேற்பார்வை அங்கத்தினர் ஊடாக அவர் கோர முடியும். ஒவ்வொரு உடன்படிக்கையை பின்தேதியிடுவதற்கு முன்வைக்கப்படும் கோரிக்கை பின்வரும் திகதியிலிருந்து 04 மாதங்களுக்கு மேற்படலாகாது.

  • கணக்காய்வு பிரிவு: பதிவுக்காக உரியவகையில் பூர்த்திசெய்யப்பட்ட பணம் செலுத்தப்பட்ட பயிற்சி உடன்படிக்கை இந்நிறுவனத்துக்குக் கிடைக்கும் திகதியிலிருந்து 4 மாதங்கள்.
  • கணக்காய்வு செய்யப்படாத பிரிவு: பின்தேதியிடல் கோரிக்கையுடன் பயிற்சி திட்டம் (Training Programme) நமது நிறுவனத்துக்கு கிடைக்கும் திகதியிலிருந்து 4 மாதங்கள்.

எவ்வாறாயினும், இத்திகதி நிறுவனத்தில் மாணவன் அல்லது மாணவி ப.க.நி. மாணவராகப் பதிவுசெய்யப்பட்ட திகதிக்கு அல்லது பயிற்சியை உண்மையாக ஆரம்பித்த திகதிக்கு அப்பால் நீடிக்கப்பட மாட்டாது.

சான்றிதழ் மற்றும் மூலோபாய நிலைக்கு வெவ்வேறாக இரண்டு உடன்படிக்கைகளில் கையொப்பமிட முடியும். அவ்வாறில்லாவிட்டால் மூன்று வருடங்களை உள்ளடக்குகிற ஒர் உடன்படிக்கையில் கையொப்பமிட முடியும்.

இது கணக்காய்வு செய்யப்படாத நிறுவனங்களில் (Non public practice org)  ஈடுபட்டுள்ள பயிற்சிபெறும் ஆண்/ பெண் பயிலுநர்களுடன் ப.க.நி. பயிற்சி முகாமையாளர் பின்தேதியிடும் காலத்தைத் தீர்மானிப்பதற்காக நடத்துகிற நேர்முகப் பரீட்சையாகும். இது அனைத்து பயிற்சியாளர்களுக்கும் கட்டாயமானதல்ல. அத்துடன் நேர்முகப் பரீடசைக்கு பயிற்சி பெறுபவர்களுக்கிடையில் பயிற்சி முகாமையாளரின் தற்றுணிபின் பிரகாரம் மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேர்முகப்பரீட்சை நடத்தப்படும்.

மூலோபாய நிலை பரீட்சைக்கு (S II) தோற்றுவதற்காகவும் பயிற்சி சான்றிதழைப் (முழுநேர தொழிலில் ஈடுபடுகின்ற) (Practical Certificate) பெற்றுக்கொள்வதற்காகவும் செய்முறைப் பயிற்சி வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச பயிற்சித் தேவையைப் பூர்த்திசெய்திருக்க வேண்டும்.

ஆகவே, பரீட்சைகளுக்குத் தோற்றுவதற்குத் தேவையான குறைந்தபட்ச தகைமைகளை மாற்றுவதற்கு அல்லது தேவையான குறைந்தபட்ச தேவைகளுக்கு ஏற்றவகையில் உடன்படிக்கையை பின்தேதியிடுவதற்கு நிறுவனம் உடன்படாததால், எதிர்காலத்தில் முகம்கொடுக்க வேண்டியிருக்கின்ற பரீட்சை தொடர்பான தமது திட்டத்தையும், குறைந்தபட்ச பயிற்சித் தேவைகளையும், செய்முறைப் பயிற்சியையும் ஆரம்பிக்கின்ற சந்தர்ப்பத்திலேயே மாணவ மாணவிகள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

தற்பொழுது பயிற்சி காலவரையறையைக் குறைத்துக்கொள்வதற்கு பின்வருவோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

    1. CIMA சார்ந்த அங்கத்தினர்கள்
    2. அங்கத்துவத்திற்குப் பிற்பட்ட (CIMA) அனுபவம் பூர்த்திசெய்யவேண்டிய பயிற்சி
      03 வருடங்களுக்கு குறைந்த மேற்பார்வை செய்யப்படுகிற 02 வருட பயிற்சி
      03 வருடங்கள் அல்லது 03 வருடங்களுக்கு மேல் மேற்பார்வை செய்யப்படுகிற 01 வருட பயிற்சி
    3. AAT அங்கத்தினர்கள் / AAT சித்தியடைந்த இறுதியானவர்கள் (19ஆம் இலக்க வினாவை பார்க்வும்)

பின்வரும் தேவைகள் பூர்த்திசெய்யப்பட்டிருந்தால், அங்கத்தினர்களும், AAT இறுதிப்பரீட்சையில் சித்தியடைந்தவர்களும் சான்றிதழ் நிலையிலான பயிற்சித் தேவைகளிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.

  • இலங்கை பட்டய கணக்காளர் அங்கத்தினர் ஒருவரின் மேற்பார்வையின் கீழ், நிறுவனம் அங்கீகரித்துள்ள நிறுவனமொன்றில் இரண்டு வருட செய்முறைப் பயிற்சியைப் பூர்த்திசெய்தல்.
  • இலங்கை பட்டய கணக்காளர் சான்றிதழ் நிலையிலான பயிற்சி பெறுநர்கள் கையொப்பமிடுகின்ற உடன்படிக்கைக்கு சமமான ஒரு உடன்படிக்கையின் கீழ் பயிற்சியைப் பூர்த்திசெய்ய வேண்டும்.
  • இலங்கை பட்டய கணக்காளர் சான்றிதழ் நிலையிலான பயிற்சி பெறுநர் ஒருவருக்கு விசேடமான நடவடிக்கைகளுக்கு சமமாக பயிற்சி அறிக்கைகளை வைத்துக்கொள்ள வேண்டும்.

முழுநேரப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்: இதன் கருத்து யாதெனில் முழுநேர அடிப்படையில் கணக்கீடு மற்றும் அதைச்சார்ந்த விடயங்களைப்பற்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில், விரிவுரையாளர்கள் அல்லது உதவி விரிவுரையாளர்கள் என்ற வகையில் சேவையாற்றுகின்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் முதல் வகுப்பு அல்லது இரண்டாவது உயர் வகுப்பு சித்திபெற்ற பட்டயக் கணக்காளர் மாணவ மாணவிகள் என்பதாகும்.

முழுநேர விரிவுரையாளர்களுக்காக பயிற்சி காலவரையறைகள் குறைக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், ஆகக்கூடியதாக 03 உடன்படிக்கைகளின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தொகுதிகளுடன் குறைந்தபட்ச பயிற்சி தேவையை 05 வருடங்களுக்குள் பூர்த்தி செய்வதற்கு அவர்களுக்கு அனுமதியுண்டு. அத்தகைய குறுகியகால உடன்படிக்கைகள் 55 நாட்களுக்கு குறைதல் ஆகாது. வார இறுதியில் பெருக்கமும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு பயிற்சி தேவைகளை பூர்த்தி செய்யாமல் மூலோபாய நிலை (Strategic II) பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கும் அனுமதியுண்டு.

பல்வேறு நிலைகளில் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் சம்பந்தப்பட்ட பயிற்சி அறிக்கைப் புத்தகங்கள் (Record Books) நிறுவனத்தில் சந்தைப் பிரிவில் விற்பனைக்குண்டு. அறிக்கைப் புத்தகத்தை வாராந்தம் எழுத வேண்டும். மேற்பார்வை அங்கத்தினரின் கையொப்பத்துடன் காலாண்டின் இறுதி நாள் முடிவடைந்து 30 நாட்களுக்குள் காலாண்டு சுருக்க அறிக்கையை பயிற்சி பெறுகின்ற ஆண் அல்லது பெண் பட்டயக் கணக்காளர் நிறுவன பயிற்சி பிரிவுக்கு கையளிக்க வேண்டும்.

அக்காலப் பகுதியில் காலாண்டு சுருக்க அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு தவறினால் குறைந்த பட்சம் இரண்டு வார காலவரையறைக்குட்பட்டு அவர் பயற்சி காலத்தை நீடிக்க வேண்டியிருக்கும்.

மூன்று மாத சுருக்கத்தை இணையத்தளத்தின் ஊடாக சமர்ப்பித்தல்

நிறுவனத்தின் இணையத்தளத்தின் ஊடாக தமது மூன்று மாத சுருக்கத்தை சமர்ப்பிப்பதற்கு பயிற்சி பெறுபவருக்கு முடியும். இதற்காக பயிற்சி பெறுபவர் பயிற்சி பிரிவில் பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலதிக விபரங்களை அறிந்துகொள்வதற்கு பயிற்சிப் பிரிவின் திரு. கயான் அவர்களை அழைக்கவும். தொலைபேசி 011-235200 நீடிப்பு 1436

வேலை தொடர்பான அனுபவங்களையும் தொழில்சார் தேர்ச்சிகளையும் தமது கற்கை நிகழ்ச்சித்திட்டத்துடன் ஒருங்கிணைத்துக்கொள்வதற்கு பயிற்சி பெறுகின்றவர்களுக்கு உதவும் பொருட்டு இந்த நிகழ்ச்சித்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. செயல்முறை நிகழ்ச்சித் தொடர்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இவ்வினாக்கள் நிறுவனத்தின் இணையத்தளத்தில் உள்ளன. ஒரு காலாண்டில் மேற்பார்வை அங்கத்தவரின் சான்றுரையுடன் குறைந்தபட்சம் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கும்படி பயிற்சியாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

குறைந்தபட்சம் 7 மணித்தியாலங்களும் ஆகக் கூடியது 8 மணித்தியாலங்களுமான முழுநேர அடிப்படையில் செயல்முறைப் பயிற்சியை மாண மாணவிகள் பெற்றுக்கொள்ள வேண்டும். பயிற்சி பெறும் நிறுவனத்தைத் தவிர்த்து ஏனைய நிறுவனமொன்றில் பகுதி நேர அடிப்படையில் அல்லது பயிற்சி பெறுபவர்கள் தொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதியில்லை.

சுற்றுலாவில் ஈடுபடுதல் மற்றும் நிர்வாக ரீதியான வேலைகளில் ஈடுபடுதல் என்பவை பயிற்சியாக கருதப்பட மாட்டாது. பொதுவான அலுவலக நேரத்திற்கு புறம்பாக வார இறுதியில் அல்லது பகுதி நேர ஒப்படைகள் என்ற வகையில் வேலை செய்கின்ற மணித்தியாலங்கள் வேலை செய்கின்ற நாள் ஒன்றுக்கு சமமாக கருதப்பட மாட்டாது.

மேற்பார்வை அங்கத்தவரினதும் நிறுவனத்தினதும் முன் அனுமதியுடன் பின்வரும் நிலைகளின் கீழ் விடுபடுவதற்கு இடமளிக்க முடியும்.

பயிற்சி காலவரையறையில் அனுமதியற்ற விடுவிப்புக்கு பயிற்சி பெறுபவருக்கு இடமளிக்கப்படமாட்டாது. அத்தகைய விடுவிப்பு நிகழ்ந்தால் குறைந்தபட்சம் 6 மாதகால வரையறையின் கீழ் இதன்மூலம் பூர்த்தி செய்வதற்குள்ள பின்வரும் காலத்திற்கு மேலதிகமாக 6 மாதங்கள் பயிற்சி நீடிக்கப்படும்.

மாணவ பயிற்சி மற்றும் அபிவிருத்திக் குழுவின் (STDC) அல்லது சபையின் அங்கீகாரம் இன்றி பயிற்சியில் இருந்து விடுவித்தல் அனுமதி பெற்ற விடுவிப்பாக கருதப்படும்.

  • பல்கலைக்கழக கல்விக்காக பயிற்சியை இடை நிறுத்துதல்
  • நீண்ட கால சுகவீனம்
  • பிரசவ விடுமுறை

குறைந்தபட்சம் ஆறு மாத பயிற்சியை முடித்ததன் பின்னர் முழுநேரப் பல்கலைக்கழக கல்வியை அடிப்படையாகக் கொண்டு பயிற்சி காலத்தை இடை நிறுத்துவதற்கு பயிற்சி பெறுகின்றவர்களுக்கு அனுமதி கோர முடியும். இதற்காக தாம் பல்கலைக்கழகத்தின் உள்ளக மாணவன் / மாணவி என்பதற்கு சாட்சியுடன் மேற்பார்வை அங்கத்தவரின் சம்மதம் தெரிவிக்கப்பட்ட கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

  • குறைந்தபட்சம் வேலை செய்யும் 110 நாட்கள் பூர்த்தி செய்யப்பட்டிருத்தல்
  • பயிற்சி வழங்குகின்ற நிறுவனம் மேற்பார்வை அங்கத்தவர் மற்றும் நிறுவனத்தின் பூர்வாங்க சம்மதத்தை எழுத்துமூலம் பெற்றுக்கொள்ளுதல்.
  • முதல் பட்டத்திற்காக முழுநேர பயிற்சியாளர்கள் அல்லது பட்டப் பின்படிப்பை கற்பதற்காக பதிவு செய்திருத்தல்.

பயிற்சியை இடைநிறுத்துவதற்கு முன்னர் நீங்கள் மேற்பார்வை அங்கத்தவரின் கோரிக்கை கடிதத்துடன் சம்பந்தப்பட்ட மருத்துவ சான்றிதழையும் பட்டயக் கணக்களார் நிறுவனத்தின் பயிற்சிப் பிரிவில் சமர்ப்பிக்க வேண்டும்.

உங்களுடைய அங்கீகரிக்கப்பட்ட இடை நிறுத்தப்பட்ட காலத்தைப் பூர்த்தி செய்ததன் பின்னர் அவ்விடயத்தை உங்களுடைய மேற்பார்வை அங்கத்தினர் ஊடாக நிறுவனத்திற்கு அறிவிக்க வேண்டும்.

மீண்டும் பயிற்சியை ஆரம்பிக்கின்ற சந்தர்ப்பத்தில் பயிற்சியை இடைநிறுத்துவதற்கான காரணத்தை நிரூபிப்பதற்கு சாட்சியங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். எஞ்சியுள்ள பயிற்சி காலத்தைப் பூர்த்திசெய்வதற்காக உரிய எதிர்வரும் பயிற்சிக் காலம் தீர்மானிக்கப்படும்.

மாணவர் ஒருவரின் அல்லது மாணவியொருவரின் ப.க.நி. மாணவத் தன்மை இரத்துச் செய்யப்பட்டால் அவருடைய பயிற்சி உடன்படிக்கையும் அச்சந்தர்ப்பத்திலேயே இரத்துச் செய்யப்படும். எவரேனும் ஒருமாணவருக்கு அல்லது மாணவிக்கு தமது பயிற்சி உடன்படிக்கையை இரத்துச் செய்ய வேண்டுமானால், அதற்காக மேற்பார்வை அங்கத்தினரின் முன்னனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் அந்த அனுமதியை ப.க.நிறுவனத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

பயிற்சி வழங்கும் நிறுவனத்திலிருந்து மேற்பார்வை செய்யும் அங்கத்தினர் இராஜிநாமா செய்தால், அவ்விடயத்தை பயிற்சி பெறுகின்றவரும் மேற்பார்வை அங்கத்தவரும் நிறுவனத்துக்கு அறிவிக்க வேண்டும். அவ்வாறு நடக்கும்போது, பயிற்சி பெறுகின்றவருக்கு பயிற்சி பெறும் எஞ்சியுள்ள வேறொரு மேற்பார்வை அங்கத்தினரின் கீழ் அந்நிறுவனத்திலேயே பூர்த்திசெய்ய இடமளிக்கப்படும். சம்பந்தப்பட்ட பயிற்சி பெறுநரின் எஞ்சியுள்ள பயிற்சி காலத்தை மேற்பார்வை செய்வதற்கு புதிய மேற்பார்வை அங்கத்தினர் எழுத்துமூலம் சம்மதம் தெரிவிக்க வேண்டும். அப்பொழுது பயிற்சி பெறுகின்றவர் முன்னிருந்த உடன்படிக்கையின் கீழ் பயிற்சியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அந்நிறுவனத்தில் வேறொரு மேற்பார்வை அங்கத்தினர் இல்லாதவிடத்து, ஆக்ககூடியதாக 08 மாதங்களுக்குள், அந்நிறுவனத்தில் பயிற்சியை நிறுத்தி வேறு அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனமொன்றில் பயிற்சியை ஆரம்பிப்பதற்கு பயிற்சி பெறுகின்றவருக்கு அனுமதியளிக்கப்படும்.

பயிற்சி நிறுவனத்தை மாற்றுகின்றபோது, இப்பொழுது இருக்கின்ற மற்றும் புதிய நிறுவனத்தின் மேற்பார்வை அங்கத்தினர்கள் இருவரினதும் முன்னனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அனுமதியைப் பெற்றுக்கொண்டதாக நிறுவனத்தின் பயிற்சி பிரிவிற்கு முற்கூட்டியே அறிவிக்க வேண்டும்.

பயிற்சி நிறுவனத்தை மாற்றுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பதிலும் பயிற்சி பெறுகிற ஆண்/ பெண் புதிய ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும்.

மூன்று மாத பயிற்சி அறிக்கைகளின் சுருக்கத்தைச் சமர்ப்பிக்கத் தாமதிக்கும் பயிற்சி பெறுநர்களின் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட பயிற்சிக் காலம் தாமத காலத்தின் அரைவாசியினால் நீடிக்கப்படும்.

மேலும், நீங்கள் குறைந்தபட்ச பயிற்சித் தேவைகளைப் பூர்த்திசெய்திருக்காவிட்டால், பயிற்சிக் காலத்தைப் பூர்த்திசெய்வதற்காக பயிற்சியை நீடிக்க வேண்டியிருக்கும்.

விடுமுறை பெற்றுக்கொள்ளப்பட்ட தினங்கள் மற்றும் அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தினங்களைத் தவிர்த்து ஆண்டொன்றுக்குத் தேவையான குறைந்தபட்ச பயிற்சித் தேவை 220 நாட்களாகும். பின்வரும் அட்டவணையில் விசேடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளவகையில் அனுபவத்தைக் காட்டுகின்ற பகுதிக்குரியதாக குறைந்தபட்ச நாட்கள் அந்த 220 நாட்களுக்குள் உள்ளடக்கப்படுதல் வேண்டும்.

அனுபவத்தின் வகை கணக்காய்வு பிரிவு கணக்காய்வு அல்லாத பிரிவு
சான்றிதழ் நிலை மூலோபாய நிலை I மூலோபாய நிலை II சான்றிதழ் நிலை மூலோபாய நிலை I மூலோபாய நிலை II
நிதி கணக்கீடு மற்றும் முகாமைத்துவ கணக்கீடு 40 50 50 100 90 90
கணக்காய்வு 80 75** 75** - 20* 20*
வரி அறவிடல் 10 15 15 10 15 15
நிதி முகாமைத்துவம் - 20 20 20
தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் 20 25 25 20 25 25
செயலகப் பணிகள் - 5 5 -
  • உள்ளக கணக்காய்வு பிரிவொன்று இல்லாதவிடத்து நிதி முகாமைத்துவ பிரிவில் வருடமொன்றுக்கு 40 நாட்கள் அதிகரிக்க வேண்டும்.
  • செயன்முறைப் பயிற்சி வழிகாட்டல்களில், பரீட்சை சான்றிதழ் தொடர்பான பகுதியில், அச்சான்றிதழுக்காக தகைமை பெறுவதற்கு குறிப்பிட்ட தேவை விசேடமானதாகக் காட்டப்பட்டுள்ளது.
  • சம்பவக் கற்கைவரை நிறுவனத்தின் அனைத்து பரீட்சைகளையும் வெற்றிகரமாகப் பூர்த்திசெய்தல் (Top CA).
  • சான்றிதழ் மற்றும் மூலோபாய நிலையின் அனைத்து பரீட்சைகளையும் வெற்றிகரமாகப் பூர்த்திசெய்தல்.
  • கட்டாய தொடர்பாடல் தேர்ச்சி நிகழ்ச்சித்திட்டங்கள் (வியாபார ஆங்கிலம் III - பகுதி II  மற்றும் III)
  • பயிற்சி தொடர்பான நேர்முக பரீட்சையை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்தல். (வாய்மூல நேர்முக பரீட்சைக்குத் தோற்றுதல்)

குறைந்தபட்ச பயற்சித் தேவையைப் பூர்த்தி செய்யாத பயிற்சி பெறுநர்களுக்கு CAB / Intermediate சான்றிதழ் அல்லது சார்பு அங்கத்துவத்தைக் கோர முடியாது.

எஞ்சியுள்ள பயிற்சி தேவையை உள்ளடக்குவதற்கு, தற்பொழுது பயிற்சி பெறுகின்ற நிறுவனம் அல்லது ஏனைய நிறுவனமொன்றுடன் பயிற்சி ஒப்பந்தத்தை நீடிப்பதற்கு, தமது மேற்பார்வை அங்கத்தினர் ஊடாக எழுத்துமூல கோரிக்கையை பயிற்சி பெறுபவர் சமர்ப்பிக்க முடியும்.

ஆம். மாணவ மாணவிகள் சித்தியடைந்துள்ள பட்டய கணக்காளர் பயிற்சி நிலை மற்றும் பயிற்சிக் காலம் என்பவற்றின் பிரகாரம் வேறுபடுகின்ற கொடுப்பனவொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு  அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெறுகின்ற ப.க. நிறுவனத்தில் பதிவுசெய்துள்ள மாணவ மாணவிகளுக்கு உரிமையுண்டு.

சான்றிதழ் நிலை பயிற்சியையும் சான்றிதழ் நிலை பரீட்சையையும் பூர்த்தி செய்த மாணவ மாணவிகளுக்கு கணக்கீடு மற்றும் வியாபாரம் தொடர்பான சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

டிப்ளோமா நிலை (மூலோபாய நிலை I) பயிற்சியையும் டிப்ளோமா நிலை (மூலோபாய நிலை II) பரீட்சையையும் பூர்த்திசெய்த மாணவ மாணவிகளுக்கு கணக்கீடு மற்றும் வியாபாரம் தொடர்பான டிப்ளோமாவுக்கு விண்ணப்பிக்க முடியும்.

மூலோபாய நிலை II பரீட்சையையும் மூலோபாய நிலை பயிற்சியையும், கட்டாய தொடர்பாடல் தேர்ச்சி நிகழ்ச்சித் திட்டத்தையும் (வியாபார ஆங்கிலம் பகுதி II மற்றும் பகுதி III யும் பூர்த்திசெய்த மாணவ மாணவிகளுக்கு அங்கத்துவ நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு விண்ணப்பிக்க முடியும்.

பயிற்சி அறிக்கைகளின் உண்மையானத்தன்மை ஆங்கில மொழிமூலம் தொடர்பாடல், சமர்ப்பணங்களை சமர்ப்பிக்கும் தேர்ச்சி மற்றும் தெரிவுசெய்த தலைப்பு தொடர்பில் தொழில்நுட்ப அறிவு போன்ற விடயங்களை மாணவர்களின் சமர்ப்பணத்தின்மூலம் மதிப்பீடுசெய்தல் நேர்முகப் பரீட்சையின் நோக்கமாகும். வெற்றிகரமான பெறுபேறுகளைப் பெறுகின்ற மாணவர் அல்லது மாணவி சார்புடைய பட்டய கணக்காளர் (ACA)அங்கத்தவராவதற்கு பரிந்துரைக்கப்படுவார்.

சார்புடைய பட்டய கணக்காளர் அங்கத்துவத்துக்கு பின்வரும் தகைமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

தொழிலில் ஈடுபடுவதற்கான சான்றிதழைப் (Certificate to Practice) பெற்றுக்கொள்வதற்கு அங்கத்தவர் ஒருவர் கணக்கீடு மற்றும் வியாபாரம் தொடர்பான டிப்ளோமாவுக்கு தகைமை பெற்றுக்கொண்டதன் பின்னர், (கணக்காய்வு பிரிவில்) அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனமொன்றில் மூலோபாய நிலையில்  வேலைசெய்யும் 440 நாட்கள் செயல்முறைப் பயிற்சியைப் பூர்த்திசெய்ய வேண்டும்.

மூலோபாய நிலை பயிற்சிக் காலத்தின்போது மேற் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாமற்போன பயிற்சி பெறுகின்றவர்களும் அங்கத்தினர்களும் எதிர்காலத்தில் தொழிலில் ஈடுபடுவதற்காக சான்றிதழ் ஒன்றைக் கோருவதற்கு தகமை பெற எண்ணினால் தமது ஒப்பந்த காலத்தை நீடித்து அல்லது புதிய ஒப்பந்தத்தைச் செய்துகொண்டு பயிற்சியைப் பூர்த்திசெய்ய வேண்டும்.

பொது இலக்கம்: 011-2352000

நீடிப்பு இலக்கம்

206 கல்வி மற்றும் பயிற்சி பிரிவின் தலைவி திருமதி. நிலுஷா திசாநாயக்க
205 பயிற்சி முகாமையாளர் திருமதி. நிமந்தி கமகே
204 பயிற்சி நிறைவேற்று அதிகாரி திரு. ஷர்லி சில்வா
203 பயிற்சி நிறைவேற்று அதிகாரி திருமதி. களனி ஆரியரத்ன
201 பயிற்சி நிறைவேற்று அதிகாரி திரு. கயான் வில்ஆரச்சி

 




அடிக்கடி கேட்கும் கேள்விகள்