English (United Kingdom)Sinhala (Sri Lanka)

CA Sri Lanka

    Font size
  • Increase font size
  • Decrease font size

பரீட்சைகள்

எமது பரீட்சைகளுக்கு உலகம் முழுவதிலும் வரவேற்பு கிடைத்துள்ளது. சந்தையில் வளர்ந்துவரும் கேள்வி மற்றும் வழங்குகின்ற தகைமைகளை உலக தரங்களுக்கு ஏற்றவகையில் பேணுவதற்காக 05 வருடங்களுக்கு ஒருமுறை பட்டய கணக்காளர் நிறுவனம் பாடத்திட்டங்களைத் திருத்துகிறது.

அடிக்கடி கேட்கும் கேள்விகள்

நிறுவனத்தின் பாடநெறி கட்டமைப்பு பின்வருமாறு தயாரிக்கப்பட்டுள்ளது.

  • கணக்கீடு மற்றும் வியாபார சான்றிதழ் – I (CAB - I)
  • கணக்கீடு மற்றும் வியாபார சான்றிதழ் – II (CAB - II)
  • பட்டயக் கணக்காளர் - தொழில் சார்ந்தது (மூலோபாய நிலை – I) கணக்கீடு, வியாபார டிப்ளோமா
  • பட்டயக் கணக்காளர் - தொழில் சார்ந்தது (மூலோபாய நிலை – II)
  • பட்டயக் கணக்காளர் - தொழில் சார்ந்தது (பட்டப் பின்படிப்பு மூலோபாய) நிலை

கணக்கீடு மற்றும் வியாபார சான்றிதழ் - I (CAB - I)

  • 01104 நிதி கணக்கீடு
  • 02104 வியாபார கணிதம் மற்றும் புள்ளிவிபரம்
  • 03104 முகாமைத்துவம், வியாபார பொருளியல்
  • 04100 வியாபார ஆங்கிலம் I

கணக்கீடு மற்றும் வியாபார சான்றிதழ் - II (CAB - II)

  • 05204 முகாமைத்துவ கணக்கீட்டு கோட்பாடுகளும் வியாபார நிதியிடலும்
  • 06204 கணக்காய்வும் உத்தரவாதமளித்தலும்
  • 07204 தகவல் முகாமைத்துவம்
  • 08204 கணக்கீட்டுப் பயன்பாடும் வரியிடலும்
  • 09200 வியாபார ஆங்கிலம் II

பட்டயக் கணக்காளர் - தொழில் சார்ந்தது (மூலோபாய நிலை I) – கணக்கீடு, வியாபாரம் தொடர்பான டிப்ளோமா

  • 12306 நிதி ஆவணப்படுத்தல் மாதிரி சட்டகம்
  • 13304 மூலோபாய முகாமைத்துவ கணக்கீடு
  • 14304 மூலோபாய முகாமைத்துவ செயல்முறை
  • 15304 உயர் வரி விதிப்பு மற்றும் மூலோபாய வரி திட்டமிடல்
  • 16304 வாணிப சட்டமும் கூட்டிணைவுச் சட்டமும்
  • 17300 Business English III - Part 1

பட்டயக் கணக்காளர் - தொழில் சார்ந்தது (மூலோபாய நிலை II)

  • 20404 உயர் நிதி அறிக்கையிடல்
  • 21404 மூலோபாய நிதி முகாமைத்துவம்
  • 22404 வியாபார மூலோபாயமும் அறிவு முகாமைத்துவமும்
  • 23404 உயர் கணக்காய்வும் உத்தரவாதமளித்தலும்

பட்டயக் கணக்காளர் - தொழில் சார்ந்தது (பட்டப் பின்படிப்பு மூலோபாய நிலை)

  • Top CA சம்பவக்கற்கை

பரீட்சை தகுதி
CAB I (சான்றுப்படுத்தப்பட்ட கணக்கீடும் வியாபாரமும் I)
  • பதிவு செய்தல்
  • கல்விப் பொதியைப் பெற்றுக்கொண்டிருத்தல்
CAB II (சான்றுப்படுத்தப்பட்ட கணக்கீடும் வியாபாரமும் II)
  • CAB I ஐ பூர்த்திசெய்தல் / விடுபடல்
  • தகவல் தொழில்நுட்பம் I மொடியுலைப் பூர்த்திசெய்தல் (பாடநெறி குறியீடு 10200)
  • கல்விப் பொதியைப் பெற்றுக்கொண்டிருத்தல்
DAB (கணக்கீடும் வியாபாரமும் டிப்ளோமா - II) / மூலோபாய நிலை - I
  • CAB II மற்றும் வியாபார ஆங்கிலம் II பூர்த்திசெய்தல் / விடுபடல்
  • தகவல் தொழில்நுட்பம் II மொடியுலைப் பூர்த்திசெய்தல் (பாடநெறி குறியீடு 18300)
  • கல்விப் பொதியைப் பெற்றுக்கொண்டிருத்தல் மற்றும் இலத்திரனியல் சுயகற்கை பாடநெறியை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்திருத்தல்
மூலோபாய நிலை II
  • DAB பரீட்சையைப் பூர்த்திசெய்தல்
  • இலத்திரனியல் சுயகற்கை பாடநெறி மற்றும் விடை அளித்தல்
  • கல்விப் பொதியைப் பெற்றுக்கொண்டிருத்தல்
  • பரீட்சையை ஆரம்பிக்கும் திகதிக்கு அல்லது அதற்கு முன்னர் மூலோபாய நிலை பயிற்சியின் (உள்ளுறை II) 220 நாட்களைப் பூர்த்திசெய்தல். கணக்கீடு மற்றும் வியாபாரம் தொடர்பான சான்றிதழுக்கு உரித்து இருத்தல் (CAB)
  • பரீட்சைக்கு விண்ணப்பம் ஏற்றக்கொள்ளும் இறுதி திகதி அல்லது அதற்கு முன்னர் CAB சான்றிதழைப் பெற்றிருத்தல் அல்லது அதற்கு விண்ணப்பித்திருத்தல்.
  • தகவல் தொழில்நுட்பம் III மொடியுலைப் பூர்த்திசெய்தல் (பாடநெறி குறியீடு 24400)
பிற்பட்ட மூலோபாயம் (Top பட்டய கணக்கீட்டு சம்பவக் கற்கை)
  • மூலோபாய நிலை Iவது IIவது பரீட்சையைப் பூர்த்திசெய்திருத்தல்

தகைமைகள் தொடர்பான தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பின் நடப்பு ஆண்டுக்காக வருடாந்த உதவுதொகையைச் செலுத்தியுள்ள மாணவ மாணவிகளுக்குப் பரீட்சைக்குத் தோற்ற முடியும்.

காலத்துக்குக்காலம் சிறப்பானதாகக் காட்டப்படுகின்ற கால வரையறைக்குள் நிறுவனத்திலிருந்து அல்லது மாகாண நிலையங்களிலிருந்து பெற்றுக்கொண்ட விண்ணப்ப படிவங்களின்மூலம் விண்ணப்பங்களை அனுப்ப முடியும்.

தனிப்படட முறையில் வந்து அல்லது முத்திரை ஒட்டப்பட்ட தமது முகவரி எழுதப்பட்ட செ.மீ. 23 X செ.மீ.10 கடித உறையுடன் எழுத்துமூல கோரிக்கையை பின்வரும் முகவரிக்கு அனுப்பி பரீட்சை விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
பரீட்சை முகாமையாளர்,
இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனம்,
30A, மலலசேகர மாவத்தை, கொழும்பு 07.

அவ்வாறு செய்ய முடியும். பின்வரும் இருவகைகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு பயிற்சி தேவைகளை நிறைவேற்றாமல் மூலோபாய நிலையிலான பரீட்சைகளுக்குத் தோற்ற முடியும்.

  • CIMA அங்கத்தினர்கள்
  • கணக்கீடு மற்றும் / அல்லது நிதி விடயங்களைப்பற்றி இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் முழுநேர விரிவுரை நடத்துகின்ற விரிவுரையாளர்கள்.

பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தையும், விண்ணப்பப்படிவம் கிடைத்தது என்பதை அறிவிப்பதற்கு தமது முகவரி எழுதப்பட்ட முத்திரை ஒட்டப்பட்ட செ.மீ. 23 X செ.மீ.10 கடித உறைகள் இரண்டையும், காலத்துக்குக் காலம் அறிவிக்கக்கூடியவகையில் விண்ணப்ப படிவத்தை அனுப்பவேண்டிய இறுதி தினத்துக்கு முன்னர், பரீட்சை முகாமையாளருக்குக் கிடைக்ககூடியவகையில் பதிவுத் தபால்மூலம் அனுப்பிவைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய இறுதி தினத்தின் பின்னர் 10 நாட்கள் வரை கிடைக்கும் விண்ணப்பங்களுக்கு தாமத விண்ணப்பப்படிவ கட்டணமொன்று அறவிடப்படும். அதன் பின்னர் கிடைக்கும் விண்ணப்பப்படிவங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு, விண்ணப்பப் படிவம் கிடைத்தமைபற்றி அறிவிக்கும் அஞ்சல் அட்டையொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

  1. சான்றிதழ் நிலை – I மற்றும் சான்றிதழ் நிலை – II பரீட்சை ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதமும் செப்டம்பர் மாதமும் நடத்தப்படும்.
  2. மூலோபாய நிலை – I, மூலோபாய நிலை – II  பரீட்சை ஒவ்வொரு வருடமும் யூன் மாதமும் டிசம்பர் மாதமும் நடத்தப்படும்.
  3. சம்பவக் கற்கை வருடத்துக்கு இரண்டுமுறை நடத்தப்படும்.

  1. சான்றிதழ் நிலை I மற்றும் II பரீட்சைகள் மார்ச் மாத 2வது மற்றும் 3வது வாரங்களில் நடத்தப்படும்.
  2. மூலோபாய நிலை I மற்றும் II பரீட்சைகள் யூன் மாதம் 4வது வாரத்தில் நடத்தப்படும்.
  3. சான்றிதழ் நிலை I மற்றும் II பரீட்சைகள்; செப்டம்பர் மாதம் 1வது, 2வது வாரங்களில் நடத்தப்படும்.
  4. மூலோபாய நிலை I மற்றும் II பரீட்சைகள் டிசம்பர் மாதம் 3வது வாரத்தில் நடத்தப்படும்.
  • இந்த பிரதான பரீட்சைகளுக்கு மேலதிகமாக, வியாபார ஆங்கிலம் I மற்றும் II க்காக விசேட 02 பரீட்சைகளும் பல்போதன சம்பவ கற்கைகளுக்காக 2 பரீட்சைகளும் நடத்தப்படும்.
  • பொதுவாக பரீட்சைக்கு 02 மாதங்களுக்கு முன்னர் பிரதான நான்கு பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்தல் முடிவடையும்.
  • ஏதேனும் பரீட்சையொன்றுக்குத் தோற்றுவதற்குத் தயாராகின்ற மாணவர்கள் குறைந்தபட்சம் பரீட்சைக்கு 03 மாதங்களுக்கு முன்னர் அதுபற்றி நிறுவனத்தில் விசாரிக்க வேண்டும்.

சான்றிதழ் நிலை 1 மற்றும் 2

  • பரீட்சார்த்திகளுக்கு சிங்களம், தமிழ் அல்லது ஆங்கில மொழியில் விடையளிக்க முடியும். ஒரு பாடத்திற்கு ஒரு மொழியில் மாத்திரமே விடையளிக்க வேண்டும்.

மூலோபாய நிலை 1 மற்றும் 2

  • பரீட்சார்த்திகள் ஆங்கில மொழியில் மாத்திரம் விடையளிக்க வேண்டும்.

விடைத் தாள்கள்

  • பரீட்சைகளுக்கு விடையளிப்பதற்காக பரீட்சார்த்திகளுக்கு ஒவ்வொரு நிறத்தில் அச்சிடப்பட்ட விடையளிக்கும் புத்தகங்களும் மேலதிக புத்தகங்களும் வழங்கப்படும்.

ஆம். புதிய பாடத்திட்டத்தின் பிரகாரம், சான்றிதழ் II பரீட்சையிலிருந்து பாடங்கள் 01க்கு விண்ணப்பித்து சித்தியடைய விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சான்றிதழ் I பரீட்சையில் தமக்குரிய அனைத்து பாடங்களையும் ஒரேநேரத்தில் விண்ணப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். அதன்போது முழுப் பரீட்சையிலும் சித்தியடையாத விண்ணப்பதாரர் ஒருவர் 1 பாடத்தில் அல்லது சில பாடங்களில் சித்தியடைந்திருந்தால் அப்பாடங்களுக்காக மீண்டும் தோற்றவேண்டிய அவசியமில்லை. அச்சித்தியடைந்த பாடங்களைத் தவர்த்து எஞ்சியுள்ள அனைத்து பாடங்களையும் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த செயற்பாட்டின் பிரகாரம் பரீட்சைக்குத் தோற்றும் எண்ணிக்கை வரையறுக்கப்படவில்லை.

நிறுவனம் எந்தக் காரணத்திற்காகவும் பரீட்சைக் கட்டணங்களைத் திருப்பிச் செலுத்துவதற்கோ அல்லது பரீட்சைக் கட்டணங்களை மாற்றுவதற்கோ இடமளிக்காது. எவரேனும் விண்ணப்பதாரர் பரீட்சை விண்ணப்பப்படிவம் ஏற்றுக்கொள்ளக்கூடிய இறுதி தினத்திற்கு முன்னர் பரீட்சை விண்ணப்பத்தை வாபஸ் பெற்றுக்கொண்டால் (அவர் நியாயமான காரணத்திற்காக) அவருடைய பரீட்சை கட்டணங்களை அண்மித்த முதல் பரீட்சைக்காக மாத்திரம் முன்னெடுத்துச் செல்வதற்கு அனுமதியளிக்கப்படும். ஆனால் அப்பரீட்சைக் கட்டணம் எந்த காரணத்திற்காகவும் திருப்பிச் செலுத்தப்படமாட்டாது.

சான்றிதழ் I பரீட்சை கொழும்பில் அமைந்துள்ள நிலையங்களுக்கு மேலதிகமாக கண்டி, காலி, இரத்தினபுரி, அநுராதபுரம், குருணாகல், யாழ்ப்பாணம், கல்முனை ஆகிய நகரங்களிலும் நடத்தப்படும்.

சான்றிதழ் II பரீட்சை கண்டி, காலி, அநுராதபுரம், குருணாகல், யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் நடத்தப்படும். மூலோபாய பரீட்சை கொழும்பில் மாத்திரம் நடத்தப்படும்.

பரீட்சார்த்தி அவருடைய பரீட்சை அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சை நிலையத்தில் அமைந்துள்ள அதில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கமுள்ள மண்டபத்தில் பரீட்சைக்குத் தோற்ற வேண்டும்.

நிறுவனம் பரீட்சை பெறுபேறுகளை பின்வருமாறு வெளியிடுகிறது.

  • விரிவான பெறுபேறுகளை நிறுவனத்தின் இணையத்தளத்தில் வெளியிடல்
  • ஒவ்வொரு பரீட்சார்த்திக்கும் அவருடைய விரிவான பெறுபேறு குறிப்பிடப்பட்ட கடிதமொன்றை அனுப்புதல்

ஆம். ஆகக்கூடிய புள்ளிகளைப் பெறுகின்ற முதல்முறை தோற்றி சித்திபெறுகின்ற பரீட்சார்த்திகளுக்கு நிறுவனம் திறமைப் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கும்.

Also candidates who obtain highest marks for each subject (other than Business Communication) at their first attempt are eligible for Subject Prize.


கட்டணம்
CAB I – 3 அல்லது 4 பாடங்கள் 3,500.00/-
CAB I – 1 அல்லது 2 பாடங்கள் 1,300.00/- பத்திரமொன்றுக்கு
CAB II 1,600.00/- பத்திரமொன்றுக்கு
மூலோபாய நிலை I 2,500.00/- பத்திரமொன்றுக்கு
மூலோபாய நிலை II 3,750.00/- பத்திரமொன்றுக்கு
Case Study 6,000.00/-

ஆம். விண்ணப்பப்படிவங்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதி தினத்திலிருந்து 10 நாட்கள் வரை தாமதமாகும் விண்ணப்பப்படிவங்களுக்கு மேலதிகமாக 50% அறவிடப்படும். அதன் பின்னர் தாமதமாகும் விண்ணப்பப்படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

பரீட்சைப் பிரிவு
தொலைபேசி - 011 2352000 நீடிப்பு. 223, 224

மின்னஞ்சல் - This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 


அடிக்கடி கேட்கும் கேள்விகள்