எல்.ஏ. வீரசிங்க புலமைப்பரிசில் நிதியம்
Scholarships for Strategic Level Trainees
இலங்கை பட்டய கணக்காளர் சங்கம் மாணவ மாணவிகளின் தேவைகளையும் ஆற்றல்களையும் அடிப்படையாகக்கொண்டு அவர்களின் நன்மைக்காக பல புலமைப்பரிசில்களை வழங்குகின்றது.
புலமைப்பரிசில் திட்டங்கள்
- எல்.ஏ. வீரசிங்க புலமைப்பரிசில் நிதியம்
நோக்கம்
நிதி பற்றாக்குறையுள்ள மாணவ மாணவிகளுக்கு நிறுவனத்தில் கற்கைப் பணிகளைப் பூர்த்திசெய்வதற்கு புலமைப் பரிசில்களை வழங்குதல்.
விண்ணப்பங்களை அனுப்பும் முறை
- இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தில் CAB I பரீட்சையை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்த மாணவ மாணவிகளிலிடமிருந்தும், குறைந்த பட்சம் GCE (உயர்தர) பரீட்சையில் 03 சாதாரண சித்திகளைப் பெற்றுள்ள மாணவ மாணவிகளிலிடமிருந்தும், பத்திரிகை அறிவித்தல்கள் மூலம் நிறுவனம் விண்ணப்பங்களை கோரும்.
- விண்ணப்பிக்கின்ற மாணவ மாணவிகளின் வருமான நிலையை உறுதி செய்துகொள்ளும்பொருட்டு அம்மாணவரின் / மாணவியின் திரட்டிய குடும்ப வருமானம் தொடர்பாக தமது பிரதேசத்தின் கிராம சேவையாளார் சான்றுப்படுத்திய சான்றிதழ் ஒன்றை விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும்.
திட்டத்துடன் சம்பந்தப்பட்ட நிபந்தனைகளும் பயன்களும்
- புலமைப்பரிசிலுக்குரிய காலவரையறை
ஆரம்பத்தில் வருடாந்தம் புதுப்பிக்கக்கூடிய வகையில் ஒரு வருடத்துக்கு புலமைப்பரிசில் வழங்கப்படும். இந்த ஆரம்ப வருடத்தில் பரீட்சையை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்திருந்தால் அந்த மாணவனுக்கு/மாணவிக்கு தொடர்ந்தும் புலமைப்பரிசில் பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியும். - நிறுவனத்தில் பரீட்சைகளை நடத்துதல்
ஒரு பரீட்சை நிலையில் சித்தியடைவதற்காக இரு முறை முயற்சிசெய்வதற்கு இடமளிக்கப்படும். - மாணவ/மாணவிகள் தொழிலில் ஈடுபடாமல் முழுநேர கற்கை நடவடிக்கைகளிலும் பயிற்சி நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும்.
- பயன்கள்
திட்டத்தின் கீழ் பயன்கள்
(i). நிறுவனத்தின் சகல கட்டாய கட்டணங்களிலிருந்து விடுவித்தல்: பதிவு கட்டணம், கற்கை பாடத்தொகுப்பு (பெக்கேஜ்), நிறுவனத்தின் விரிவுரைக் கட்டணம், கட்டாய பாடநெறி கட்டணம், பயிற்சி குறிப்பு புத்தகங்கள், பயிற்சி ஒப்பந்த கட்டணங்கள், பரீட்சைக் கட்டணங்கள் (இரு முயற்சிகளுக்கு மாத்திரம்)
(ii). CAB II பரீட்சையைப் பூர்த்திசெய்தல் மற்றும் பயிற்சியை ஆரம்பித்தல் என்பவற்றை அடுத்து புலமைப்பரிசில் காலத்தில் மாதமொன்றுக்கு ரூ.3,000/- கொடுப்பனவு மாணவ மாணவிகளுக்குச் செலுத்தப்படும்.
வருடமொன்றுக்கு வழங்கப்படுகின்ற புலமைப்பரிசில்களின் எண்ணிக்கை 12 ஆகும்
- தேர்ச்சி புலமைப்பரிசில் திட்டம்
நோக்கம்
இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தில் பரீட்சைகளுக்குத் தோற்றி உயர்ந்த நிலையில் சித்தி பெற்றுள்ள, தேசிய, வலய, பாடசாலை மட்டத்தில் கல்விசாரா புறச் செயற்பாடுகளில் கலந்துகொண்ட, மாணவ மாணவிகளுக்கு தமது நிதி கஷ்டங்களைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவிசெய்வதன்மூலம் பட்டய கணக்காளர் தொழிலில் ஈடுபடுத்துதல், இத்திட்டத்தின் குறிக்கோளாகும்.
விண்ணப்பங்களை அனுப்பும் ஒழுங்குமுறை
மேற் குறிப்பிட்ட தகைமைகள் உள்ள மாணவ மாணவிகளிடமிருந்து பத்திரிகைகள் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்படும்.
திட்டத்துடன் சம்பந்தப்பட்ட நிபந்தனைகளும் பயன்களும்
- புலமைப்பரிசிலுக்குரிய காலவரையறையும் நிபந்தனைகளும்
ஆரம்பத்தில் வருடாந்தம் புதுப்பிக்கக்கூடிய வகையில் ஒரு வருடத்துக்கு புலமைப்பரிசில் வழங்கப்படும். இந்த ஆரம்ப வருடத்தில் பரீட்சையை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்திருந்தால் அந்த மாணவனுக்கு/ மாணவிக்கு தொடர்ந்தும் புலமைப்பரிசில் பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியும். - நிறுவனத்தின் பரீட்சைகளில் சித்தியடைதல்
ஒரு பரீட்சை நிலையில் சித்தியடைவதற்காக இரு முறை முயற்சிசெய்வதற்கு இடமளிக்கப்படும். - மாணவ/ மாணவிகள் தொழிலில் ஈடுபடாமல் முழுநேர கற்கை நடவடிக்கைகளிலும் பயிற்சி நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும்.
- பயன்கள்
திட்டத்தின் கீழ் பயன்கள்
(i). நிறுவனத்தின் சகல கட்டாய கட்டணங்களிலிருந்து விடுவித்தல்: பதிவு கட்டணம், கற்கை பாடத்தொகுப்பு (பெக்கேஜ்), நிறுவனத்தின் விரிவுரைக் கட்டணம், கட்டாய பாடநெறி கட்டணம், பயிற்சி குறிப்பு புத்தகங்கள், பயிற்சி ஒப்பந்த கட்டணங்கள், பரீட்சைக் கட்டணங்கள் (இரு முயற்சிகளுக்கு மாத்திரம்)
(ii). CAB II பரீட்சையைப் பூர்த்திசெய்தல் மற்றும் பயிற்சியை ஆரம்பித்தல் என்பவற்றை அடுத்து புலமைப்பரிசில் காலத்தில் மாதமொன்றுக்கு ரூ.3,000/- கொடுப்பனவு மாணவ மாணவிகளுக்குச் செலுத்தப்படும்.
வருடமொன்றுக்கு வழங்கப்படுகின்ற புலமைப்பரிசில்களின் எண்ணிக்கை 30 ஆகும்.
உயர்தர கணிதம் மற்றும் விஞ்ஞான மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படுகின்ற விசேட புலமைப்பரிசில்
உயர்தர மட்டத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களில் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ள, தேசிய மற்றும் பாடசாலை மட்டத்தில் கல்விசாரா புறச் செயற்பாடுகளில் கலந்துகொண்ட, மாணவ மாணவிகளுக்கு பட்டய கணக்காளர் தொழிலில் ஈடுபடுவதற்கு பக்கபலமாக இருக்கக்கூடிய வகையில் இப்புலமைப் பரிசில் வழங்கப்படுகின்றது.
விண்ணப்பங்களை அனுப்பும் முறை
மேற் குறிப்பிட்ட தகைமைகள் உள்ள மாணவ மாணவிகளிடமிருந்து பத்திரிகைகள் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்படும்.
புலமைப்பரிசிலுக்குரிய காலவரையறையும் நிபந்தனைகளும்
- புலமைப்பரிசிலுக்குரிய காலவரையறையும் நிபந்தனைகளும்
ஆரம்பத்தில் வருடாந்தம் புதுப்பிக்கக்கூடிய வகையில் ஒரு வருடத்துக்கு புலமைப்பரிசில் வழங்கப்படும். இந்த ஆரம்ப வருடத்தில் பரீட்சையை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்திருந்தால் அந்த மாணவனுக்கு/மாணவிக்கு தொடர்ந்தும் புலமைப்பரிசில் பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியும். - நிறுவனத்தின் பரீட்சைகளில் சித்தியடைதல்
ஒரு பரீட்சை நிலையில் சித்தியடைவதற்காக இரு முறை முயற்சிசெய்வதற்கு இடமளிக்கப்படும். - மாணவ/மாணவிகள் தொழிலில் ஈடுபடாமல் முழுநேர கற்கை நடவடிக்கைகளிலும் பயிற்சி நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும்.
- பயன்கள்
திட்டத்தின் கீழ் பயன்கள்
(i) நிறுவனத்தின் சகல கட்டாய கட்டணங்களிலிருந்து விடுவித்தல்: பதிவு கட்டணம், கற்கை பாடத்தொகுப்பு (பெக்கேஜ்), நிறுவனத்தின் விரிவுரைக் கட்டணம், கட்டாய பாடநெறி கட்டணம், பயிற்சி குறிப்பு புத்தகங்கள், பயிற்சி ஒப்பந்த கட்டணங்கள், பரீட்சைக் கட்டணங்கள் (இரு முயற்சிகளுக்கு மாத்திரம்)
புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பப்படிவங்கள் - 2014
Download Application for L. A. Weerasinghe Scholarships 2014