Sinhala (Sri Lanka)English (United Kingdom)

casrilanka

    Font size
  • Increase font size
  • Decrease font size

கல்விப் பிரிவு

கல்விப் பிரிவின் நடவடிக்கைகள்

  • பாடவிதான அபிவிருத்தி.
  • பட்டய கணக்காளர் கற்கை நிகழ்ச்சித் திட்டங்களின் தொடர்ச்சியான முன்னேற்றம்.
  • பட்டய கணக்காளர் நிகழ்ச்சித்திட்ட கற்றல் உபகரணங்களை மேம்படுத்தல், இது கற்றல் நூல் பயிற்சி மற்றும் மீழாய்வு நூல் எழுதுதல், வெளியிடுதல் என்பவற்றை உள்ளடக்கி இருக்கும்.
  • பட்டய கணக்காளர் கற்கை நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக உள்ள மாணவர் விபரங்களை பராமரித்தல் மற்றும் தேர்வுகளுக்கு அமருவதற்கான மாணவர்களின் தகுதிகளை உறுதி செய்தல்.
  • மாணவர்களுக்கான கருத்தரங்குகள், இணைய கருத்தரங்குகள், காணொளி பதிவுகள் செயலமர்வுகளை நடத்துதல்.
  • பட்டய கணக்காளர் கல்வி நிகழ்ச்சித் திட்டங்களுடன் தொடர்புடைய தனியார்துறை கற்பித்தல் கல்லூரிகளுடன் இணைத்தல்.
  • ஆசியர் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை நடத்துதல்.
  • புதிய விலக்களிப்புக்களை (exemptions) மீழாய்வு செய்தல்.
  • மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை நிகழ்ச்சித் திட்டங்களை நடத்துதல்.

பட்டய கணக்காளர் கற்கை நிகழ்ச்சித்திட்டம்

பட்டயக் கணக்காளர் கற்கை நிகழ்ச்சித் திட்டமானது பின்வரும் விடயங்களை உள்ளடக்கி இருக்கும்,

  1. கற்றல் உபகரணம் - கல்விப் பிரிவானது ஒவ்வொரு நிலைக்குமான கற்றல் பொதிகளை வெளியிடுகிறது. மற்றும் பொருத்தமான தேர்வுகளுக்கு தோற்றுவதற்கு அனுமதி அளிக்கின்ற இந்த கற்றல் பொதிகளை கொள்வனவு செய்வது மாணவர்களுக்கு கட்டாயமானதாகும்.

  2. வகுப்பறை விரிவுரைகள் - தனியார் துறை கல்விப் பிரிவினால் நடாத்தப்படுகின்ற வகுப்பறை விரிவுரைகளில் கலந்து கொள்வதற்கு மாணவர்களை ஊக்குவித்தல். எவ்வாறாயினும் இது கட்டாயமான ஒரு தேவைப்பாடில்லை மற்றும் மாணவர்கள் பொருத்தமான தேர்வுகளுக்கு தயாராகுவதற்கு சுயகற்றல் முறையை தெரிவு செய்யலாம்.

  3. கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் - பட்டய கணக்காளர் மாணவர்களுக்கு கல்வி மற்றும் பரீட்சை பிரிவுகளானது கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துகின்றது. இந்த கருத்தரங்குகள் தேர்வுகளுக்கு தயாராகுதல், பாடப்பரப்பு நடைமுறை கற்கை செயலமர்வுகள் என்பவற்றிலுள்ள புதிய மாற்றங்ளை மேம்படுத்தல் போன்ற பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. எனவே மாணவர்கள் இந்த கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளில் பங்குபற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கற்றல் நூலின் விலைகள் - 2017

கற்றல் நூல் வழங்குமிடம்