Sinhala (Sri Lanka)English (United Kingdom)

casrilanka

    Font size
  • Increase font size
  • Decrease font size

இலங்கைப் பட்டயக் கணக்காளர் நிறுவகத்தின் நிதி அறிக்கையிடலின் தலைசிறந்த வேலைத் திறனுக்கான மகுடம் சூட்டும் 55வது ஆண்டறிக்கை விருதுகளுக்கான அழைப்பு

நாட்டில் தயாரிக்கப்பட்ட சிறந்த ஆண்டறிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில், இலங்கைப் பட்டயக் கணக்காளர் நிறுவனம் நிதி அறிக்கையிடலின் மேன்மைத்துவ வணிக உரிமங்களிடமிருந்து அதன் 55வது ஆண்டறிக்கை விருது வழங்கல் போட்டிக்கான விண்ணப்பங்களைத் தற்போது ஏற்றுக் கொள்கிறது.

CA Sri Lanka President Mr. Jagath Perera and Chairman of the Annual Report Awards Committee Mr. Heshana Kuruppu unveils the new trophy of the Annual Report Awards competition in the presence of CA Sri Lanka’s Vice President Mr. Manil Jayesinghe, CEO Ms. Dulani Fernando, Secretary Mr. Prasanna Liyanage and Chairman of Colombo Stock Exchange Mr. Ray Abeywardena.

அரை நூற்றாண்டிற்கும் மேற்பட்ட ஒரு முற்போக்கான வரலாற்றைக் கொண்ட இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆண்டறிக்கை விருது வழங்கல் போட்டியானது வெளிப்படைத்தன்மை, கணக்களி தகமை, கூட்டுவணிகச் சமூகப் பொறுப்பு மற்றும் கூட்டாண்மை ஆளுகை ஆகியவற்றை வணிகங்களிடையே ஊக்கப்படுத்தும் முக்கியமான கூட்டு வணிக மட்டப் போட்டியாக ஏற்பிசைவு பெற்றுள்ளது.

Head table from L to F: CA Sri Lanka Vice President Mr. Manil Jayesinghe, Chairman of Annual Report Awards Committee Mr. Heshana Kuruppu, Chairman of Colombo Stock Exchange Mr. Ray Abeywardena, CA Sri Lanka President Mr. Jagath Perera, CSE CEO Mr. Rajeeva Bandaranaike, CA Sri Lanka’s CEO Ms. Dulani Fernando and Secretary Mr. Prasanna Liyanage.

இப் போட்டியில் ஆண்டறிக்கைகளைத் தயாரிக்கும் சிறிய மற்றும் பாரிய வணிகங்கள் முதல் பெருநிறுவனங்கள் மற்றும் பல்தேசிய வணிகங்கள் வரையில் பரந்துபட்ட, சிறிய நேர சமூக குழுக்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் நிறிய நடுத்தரளவான அமைப்புக்களுக்கும் கூட அனுமதியளிக்கப் பட்டுள்ளது. விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி நாள் 31 ஆகஸ்ட் 2019 ஆகும். இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகமானது 31 டிசம்பர் 2018 மற்றும் 31 மார்ச் 2019 இல் முடிவடைந்த ஆண்டுகளுக்கான நிதிக்கூற்றுக்களுக்கான ஆண்டறிக்கைகளை ஏற்றுக் கொள்ளும்.

இலங்கை பேண்தகு அபிவிருத்தியை அடையவும் உயர்நடுத்தர வருமான நிலையை அடைந்து கொள்வதற்கும் வெளிப்படைத்தன்மை, கணக்களிதன்மை மற்றும் கூட்டுவணிகப் பொறுப்பு ஆகியன தலையாய தேவைப்பாடுகள் என இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தின் தலைவர் திரு ஜகத் பெரேரா கூறினார். மேலும் அவர் 'ஆகையால், நிதி அறிக்கையிடலானது கூட்டுவணிக உலகு மற்றும் நாடு ஆகிய இரண்டின் மீதும் ஓர் நீண்டகால இருப்பினைக் கொண்டுள்ளதுடன், இத்தகைய நிலைமைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதனால், உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களிற்கு ஏற்ற வகையிலான வெளிப்படையான ஆண்டறிக்கைகளைக் கம்பனிகள் தயாரிப்பது முக்கியமாகும்' என்றும் கூறினார்.

திரு. பெரேரா அவர்கள், அரை நூற்றாண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியிலேயே ஆண்டறிக்கை விருது வழங்கல் போட்டியினை அறிமுகப்படுத்தியதன் மூலம், இலங்கைப் பட்டய கணக்காளர் நிறுவகமானது பாரிய மற்றும் சிறிய வணிக அமைப்புக்கள் இரண்டுமே தொட்ர்ச்சியான வகையில் நிலைமாறாது பூகோளரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நஜயமங்களுக்கு இணங்கி மேலும் வெளிப்படைத்தன்மை மற்றும் கணக்களிதகமையைப் பின்பற்றி வந்துள்ளமையை உறுதி செய்துள்ளது என்பதைக் குறித்துக் காட்டினார். 'இந்த ஆண்டு, நாம் இந்தப் போட்டியின் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ள வேளையில், நிறுவனங்கள் தேசிய மட்டத்தில் ஒரு முக்கிய அளவீடாக மாத்திரம் அமையாமல் நிறுவனங்கள் இதுவரை இல்லாவிடினும், தங்கள் நீடித்து நிலைக்க உதவும் ஒரு பொறுப்புவாய்ந்த அமைப்பு என்னும் மேன்மைத்துவத்தில் சிறப்பாக இருக்க வேண்டிய நிலைமைக்கு செல்ல தயாராக இருப்பதற்காக இந்த பெருமைமிகு போட்டியினைப் பயன்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்' என அவர் கூறினார்.

ஆண்டறிக்கை விருதுவழங்கல் குழுவின் தவிசாளர் திரு. ஹேஷன குருப்பு அவர்கள் பல ஆண்டு காலமாக இப் போட்டியினது அந்தஸ்து மற்றும் முக்கியத்துவம் அதிகரித்துள்ளதுடன், ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து வரும் போட்டியின் பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையானது முக்கியத்துவம் மிக்கதோர் சான்றாக இருக்கிறது எனக் கூறினார். 'கடந்த ஆண்டு, நாம் சிறியநேர இலாப நோக்கற்ற நிறுவனங்கள் முதல் ப்ளுசிப் நிறுவனங்கள் வரையான 130 நிறுவனங்கள் நிதி அறிக்கையிடலின் சிறந்த நடைமுறைகள் நோக்கிய அவற்றின் ஈடுபாட்டை நிரூபித்திருந்தன.'

போட்டியானது அதன் 55வது ஆண்டினை அடையும் இவ் வேளையில், குழுவானது இந்த ஆண்டு முதல் போட்டிக்கானதோர் தனித்துவமான வர்த்தக அடையாளம் மற்றும் கோப்பையை உருவாக்குவதன் மூலம் போட்டிக்கான ஒரு தனிப்பட்ட அடையாளத்தை உருவாக்கி முன்னோக்கி நகர்த்த முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார. 'இது இப் போட்டியனது வர்த்தக நாமத்தை மேலும் மேம்படுத்தும்' என அவர் கூறினார்.

திரு. குருப்பு மேலும் கூறுகையில், இந்த ஆண்டும் கூட இலங்கைப் பட்டயக் கணக்காளர் நிறுவகம் போட்டி தொடர்பான விடயங்களில் சமீபத்திய கணக்கியல் நியமங்கள் மற்றும் பிற ஒழுங்குமுறை அறிவிப்புகள் அடிப்படையிலான புள்ளியிடல் திட்டத்தைப் புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் கூறினார்.

அனைத்து விண்ணப்பங்களும் 250 புள்ளியிடல் தேர்வாளர்கள் உட்பட்ட சுமார் 300 நபர்களது அத்துடன் 40 துறைசார் வல்லுநர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், ஒழுங்குமுறை அமைப்புக்களின் அதிகாரிகள் மற்றும் கல்வித்துறைசார்ந்நதவர்களை உள்ளடக்கிய நடுவர்களுடனான ஒரு கடுமையான புள்ளியிடல் செயல்முறைக்கு உட்படுத்தப்படும்.

நிதி அறிக்கையிடலின் சிறந்த பங்குபற்றுனர் 'ஒட்டுமொத்த வெற்றியாளர்' எனவும் வங்கியியல், நிதியியல், காப்புறுதி, பன்முகப்படுத்தப்பட்ட குழுமங்கள், உற்பத்தி நிறுவனங்கள், உணவு மற்றும் குடிபானம், சுகாதாரம், வர்த்தகம், உல்லாசவிடுதி, காணி மற்றும் மெய்ச் சொத்து, மோட்டார், சேவை, தொடர்பாடல், ஊடகம், அரச நிறுவனங்கள், சட்டரீதியான அமைப்புக்கள், பெருந்தோட்டம், கட்டுமானம், சக்தி மற்றும் வலு, இலாபநோக்கற்ற அமைப்புக்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் சிறிய நடுத்தர உரிமங்கள் ஆகியன உள்ளடங்கலான 25 துறைசார் பிரிவுகளின் கீழ் ஏற்பிசைவு செய்யப்படும். போட்டியானது முகாமைக் கருத்துரை விருது, கூட்டாண்மை ஆளுகை வெளிப்படுத்தல் விருது, கூட்டுவணிக சமூகப் பொறுப்பு விருதுகளையும், ஒருங்கிணைந்த அறிக்கையிடல் பிரிவின் கீழ் மூன்று விருதுகளையும் கொண்டிருக்கும்.