இலங்கை பிரதமர் கௌரவ. ரணில் விக்கிரமசிங்க மற்றும் சிரேஷ்;ட அரச அலுவலர்கள், வர்த்தக தலைவர்கள் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்த கோலாகல நிகழ்வு 2018 பெப்ரவரி 08ம் திகதி இடம்பெற்ற வேளையில், அவர்கள் முன்னிலையில் இலங்கை பட்டயக் கணக்காளர்கள் கல்வி நிறுவனத்தின் (CA ஸ்ரீலங்கா) 24 வது தலைவராக திரு. ஜகத் பெரேரா அவர்கள் வைபவரீதியாக நியமனம் செய்யப்பட்டார்.
முன்னணி கணக்காய்வு தொழிற்துறை நிபுணராக திகழும் திரு. பெரேரா அவர்கள் CA ஸ்ரீலங்காவின் fellow அங்கத்தவராக விளங்குவதுடன், இடர் முகாமைத்துவ ஆலோசனைகள் மற்றும் தடயவியல் கணக்காய்வு ஆகிய துறைகளில் பரந்துபட்ட அனுபவத்தினைக் கொண்டுள்ளார். தற்போது இவர் இலங்கை KPMG இன் பங்காளராக செயலாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
2010ம் ஆண்டு முதல் CA ஸ்ரீலங்காவின் கவுன்சில் அங்கத்தவராக சேவையாற்றிய இவர், இக்கல்வி நிறுவனத்தின் உப தலைவராக 2016 முதல் 2017 முதல் கடமைபுரிந்துள்ளார். இக்கல்வி நிறுவனத்தில், செயற்பாட்டு மறுஆய்வுக் கமிட்டி, பரீட்சைகள் கமிட்டி, மாணவர் பயிற்சி மற்றும் மேம்பாட்டு கமிட்டி, SMP கொள்திறன் கட்டமைத்தல் பணிக்குழு, இக்கல்வி நிறுவனத்தின் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் ஆகக்குறைந்த உதவித்தொகைகள் குறித்த மதிப்பாய்வு மற்றும் சிபாரிசுகளை மேற்கொள்ளும் உப-குழு மற்றும் இக்கல்வி நிறுவனத்தின் நடைமுறைப்பயிற்சிகளுக்கான வழிகாட்டியினை மதிப்பாய்வு செய்யும் உப-குழு ஆகியவற்றின் தலைமை அலுவலராக செயற்பட்டதுடன், CA ஸ்ரீலங்காவின் மாற்றுத்தலைவராகவும், பல்வேறு கமிட்டிகளின் அங்கத்தவராகவும் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. திரு. பெரேரா அவர்கள், இலங்கையில் தொழிற்துறை சார்ந்த கணக்காய்வு நிறுவனங்களின் மேம்பாட்டுக்கான உப-குழுவின் தலைவராகவும் விளங்குகின்றார்.
திரு. பெரேரா அவர்கள் சர்வதேச கணக்காய்வு பரப்பில் குறிப்பிடத்தக்க வகிபாகங்களை வகிக்கின்றார். அவற்றுள் ஆசிய பசுபிக் கணக்காய்வாளர்கள் கூட்டமைப்பு (CAPA) இன் பொதுத்துறை பிரிவு நிதி முகாமைத்துவ கமிட்டியின் அங்கத்தவராக விளங்குதல், தொழிற்துறை நெறிமுறைகள் மற்றும் சுயாதீன கமிட்டியின் அங்கத்தவராக விளங்குதல், சிறிய மற்றும் நடுத்தர நடைமுறைகள் கமிட்டி மற்றும் பேண்தகைமை மேம்பாட்டு இலக்குகள், தென்னாசிய கணக்காய்வாளர்கள் கூட்டமைப்பின் (SAFA), SDG பணிக்குழு ஆகியவற்றில் செயற்பாட்டு அங்கத்தவராக விளங்குகின்றார். அதுமட்டுமன்றி, இலங்கை கணக்கியல் மற்றும் கணக்காய்வு தரநிர்ணய கண்காணிப்பு சபையின் (SLAASMB) பணிப்பாளராகவும் விளங்கும் இவர், இலங்கை பாதுகாப்பு மற்றும் பிணையங்கள் கமிஷனில், கமிஷன் அங்கத்தவராகவும் விளங்குகின்றார்.
கொழும்பு ஆனந்தா கல்லூரியின் முன்னாள் மாணவரான திரு. பெரேரா அவர்கள் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் வர்த்தக நிர்வாக விஞ்ஞான இளங்கலைப்பட்டதாரியாகவும்; விளங்குகின்றார். ஐக்கிய அமெரிக்காவின் சான்றுபெற்ற மோசடி மதிப்பாளர்கள் கூட்டமைப்பின் அங்கத்தவரான இவர் உள்ளக கணக்காய்வாளர்கள் கல்வி நிறுவனத்தின் அங்கத்தவராகவும் திகழ்கின்றார். மோசடிகள் மற்றும் white collar குற்றங்களை கையாள்தல் ஆகிய தலைப்புகளின் கீழ் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு ஆராய்ச்சிக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.
இதேவேளை திரு. மணில் ஜயசிங்க அவர்கள் CA ஸ்ரீலங்காவின் உப தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இலங்கைErnst & Young இன் உத்தரவாத தலைமை அலுவலராகவும் சிரேஷ்ட பங்காளராகவும் விளங்குகின்றார்.
CA ஸ்ரீலங்காவின் fellow அங்கத்தவராக விளங்கும் இவர் பொது நிதி மற்றும் கணக்காய்வு பட்டய கல்வி நிறுவனம் (CPFA) - லண்டன் fellow அங்கத்தவராகவும் திகழ்கின்றார். திரு. ஜயசிங்க அவர்கள் CA ஸ்ரீலங்காவின் கவுன்சில் அங்கத்தவராக 2014ம் ஆண்டு முதல் கடமையாற்றியுள்ளதுடன், கணக்காய்வு பீடத்தின் மாற்று தலைவர் மற்றும் செயற்பாட்டு மறுஆய்வு கமிட்டி ஆகியவற்றின் தலைவராக விளங்கியதோடு இணைந்து, நியதிச்சட்டக்கணக்காய்வு தரநிர்ணய கமிட்டியின் தலைவராகவும் செயலாற்றியுள்ளார்.
திரு. ஜயசிங்க அவர்கள் தற்போது, சர்வதேச கணக்கியல் கூட்டமைப்பின் (IFAC), சர்வதேச கணக்கியல் கல்வித்தரநிர்ணய சபையின், சபை அங்கத்தவராக விளங்குவதுடன் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கானதணிக்கை கமிட்டியின் ஆலோசகராகவும் திகழ்கின்றார். இவர் CIMA ஸ்ரீலங்காவின் முன்னாள் சபை அங்கத்தவராகவும் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
CAPTIONS:
|
|
|
|
|