கணக்கியல் துறையில் முன்னேற விரும்பும் சிரேஷ்ட பொதுத்துறை அலுவர்கள் தற்போது, CA ஸ்ரீலங்கா மற்றும் அதன் பொதுத்துறை பிரிவான இலங்கை பட்டய பொது நிதி கணக்காளர்கள் (APFASL) ஆகியன இணைந்து வழங்கும் பட்டய பொது நிதி கணக்கியல் (CPFA) தகைமையினை பெற்றுக்கொள்ள முடியும்.
நாட்டின் பொதுத்துறை கணககாளர்கள், தணிக்கையாளர்கள் மற்றும் மதிப்பாய்வாளர்களை மேம்படுத்தி, அவர்ளின் தொழிற்துறை நிலையினை தரமுயர்த்தும் நோக்குடன் CA ஸ்ரீலங்கா முன்னெடுக்கும் முதன்மை முனைப்பின் முதற்கட்டமாக, CPFA தராதரத்தினை அதன் பொதுத்துறை பிரிவிலுள்ள 100 அங்கத்தவர்களுக்கு அளிக்கின்றது. இந்த வழங்கலானது, பொதுத்துறையில் நீண்ட காலம் பணியாற்றியவர்களை அங்கீகரித்து APFASL அங்கத்தவர்களுக்கு தொழிற்துறை தகைமையை அளிப்பதான முனைப்பின் முதற்கட்டமாக விளங்குகின்றது.
இதற்கமைவாக, பொதுத்துறைக்கு தமது பங்களிப்பினை சிரேஷ்ட அலுவலர்கள் மட்டத்தில் 10 வருடங்களுக்கு மேலான திருப்த்திகரமான பணியில் சேவையாற்றியதுடன், நிதி முகாமைத்தும் சார்ந்த பட்டப்பின்படிப்பு தகைமை அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில், நிதி முகாமைத்துவம் சார்ந்த MBA தகைமை அல்லது இதற்கு சமாந்தரமான உயர் கல்வித்தகைமையைக் கொண்ட APFASL அங்கத்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த முதன்மை அங்கத்துவ வழங்கலின் அனுகூலத்தினை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள்இ தமது விண்ணப்பங்களை தம் நிறுவன தலைமை அதிகாரிகள் ஊடாக 2016 ஒக்டோபர் 31ம் திகதியன்று அல்லது அதற்கு முன்னதாக 'செயலாளர் APFASL, CA ஸ்ரீலங்கா பொதுத்துறை பிரிவு, இலங்கை பட்டயக்கணக்காளர்கள் கல்வி நிறுவனம், 30A, மலலசேகர மாவத்தை, கொழும்பு 07' என்ற முகவரிக்கு (“Secretary, APFASL, Public Sector Wing of CA Sri Lanka, The Institute of Chartered Accountants of Sri Lanka, 30 A Malalasekara Mawatha, Colombo 7) பதிவுத்தபாலில் அனுப்பிவைக்கவும்.
விண்ணப்பங்களை நேரடியாக APFASL அலுவலகத்திலும் கையளிக்க முடியும். விண்ணப்பப்படிவங்களை www.casrilanka.com தளத்திலிருந்து தரவிறக்கம் செய்ய முடியும்.
CA ஸ்ரீலங்கா மற்றும் அதன் பொதுத்துறை பிரிவான இலங்கை பட்டய பொது நிதி கணக்காளர்கள் (APFASL) ஆகியனவும், பொது நிதியில், உலகின் தனியொரு தொழிற்துறை கணக்கியல் நிறுவனமாக விளங்கும். பொது நிதி மற்றும் கணக்கியல் பட்டய கல்வி நிறுவனம் (The Chartered Institute of Public Finance and Accountancy - CIPFA) லண்டன் ஆகியன ஒன்றிணைந்து இலங்கையில் பொதுத்துறையில் சேவையாற்றும் கணக்கியல் மற்றும் நிதிசார் தொழிற்துறையாளர்களுக்கான CPFA தகைமையை அங்குரார்ப்பணம் செய்தது. இந்த CPFA தகைமையானது, பொதுத்துறையிலுள்ள கணக்காளர்கள், தணிக்கையாளர்கள் மற்றும் மதிப்பீட்டாளர்கள் ஆகியோரின் தகைமையை மேலும் உயர்த்தும் என்பதுடன், தொழிற்துறை உலகில் அவர்களின் மதிப்பினையும் அதிகரிக்கும்.