எங்களது தகைமைகளுக்கான அங்கீகாரம் உலகளாவிய ரீதியில் காணப்படுகின்றது.இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனமானது சந்தையில் வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்ய மற்றும் தகைமைகள் உலக தரங்களுக்கு இணையாக உள்ளன என்பதை உறுதிப்படுத்துவதற்காக ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அதனுடைய பாடத்திட்டங்களை மாற்றியமைக்கின்றது.
* PDF வடிவத்தில் பார்வையிட பார்வையிட படத்தின் மீது அழுத்தவும்.
கேள்வி பதில்கள் (FAQs)
நிறுவனத்தின் கற்கைநெறி கட்டமைப்பானது கீழக்காணும் மூன்று தொகுதிகளை உள்ளடக்கி இருக்கும்:
- Executive Level
- Business Level
- Corporate Level
ஒவ்வொரு மூன்று தொகுதிகளும் கீழ்க்காணும் வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளவாறு Knowledge, Skills, Personal ஆகிய மூன்று pillars களை கொண்டிருக்கும்.
|
KNOWLEDGE PILLAR
| SKILLS PILLAR
| PERSONAL PILLAR |
Executive Level பாடங்கள்
|
KE1-Financial Accounting & Reporting Fundamentals |
SE1-Executive Communication & People Skills |
PE1-Executive Practical Training & Development |
KE2-Management Accounting Information |
SE2-Executive Information Technology & Systems |
|
KE3-Fundamentals of Taxation & Law |
|
|
KE4-Processes, Assurance & Ethics |
|
|
KE5-Commercial Insight for Management |
|
|
Business Level பாடங்கள்
|
KB1-Business Financial Reporting |
SB1-Business Communication & People Skills |
PB1-Executive Practical Training & Development |
KB2-Business Management Accounting |
SB2-Business Information Technology & Systems |
|
KB3-Business Taxation & Law |
|
|
KB4-Business Assurance, Ethics & Audit |
|
|
KB5-Business Value Creation |
|
|
Corporate Level பாடங்கள்
|
KC1-Corporate Financial Reporting |
SC1-Corporate Communication & People Skills |
PC1-Executive Practical Training & Development |
KC2-Corporate Finance & Risk Management
|
SC2-Corporate Information Technology & Systems
|
|
KC3-Corporate Taxation |
|
|
KC4-Corporate Governance, Assurance & Ethics |
|
|
KC5-Corporate Strategy & Contemporary Issues |
|
|
பரீட்சை | பரீட்சைக்கான அடிப்படைத் தகுதி |
Executive Level Knowledge - பாடங்கள் |
- பதிவு
- கற்கைப் பொதிக்கான கட்டணம் (செலுத்தல் மற்றும் கற்கை பொதியை பெற்றுக்கொள்ளல் வேண்டும்)
- தகுதியுள்ளவர் என்றால் விலக்களிப்புக்களை பெறல்
|
Business Level Knowledge - பாடங்கள் |
- பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் ஆண்டில் பதிவை புதுப்பித்தல்.
- Executive level இன் ஒரே வகையான pillar பாடத்தில் சித்தியடைந்திருத்தல் அல்லது விலக்களிப்புக்களை பெற்றிருத்தல்.
- SE2-Executive Information Technology & Systems இல் சித்தியடைந்திருத்தல் அல்லது விலக்களிப்புக்களை பெற்றிருத்தல்.
- SE1-Executive Communication & People Skills இல் சித்தியடைந்திருத்தல் அல்லது விலக்களிப்புக்களை பெற்றிருத்தல்.
- ஒவ்வொரு பாடத்துக்குமான கற்றல் வழிகாட்டியை கொள்வனவு செய்தல் மற்றும் பரீட்சைக்கு ஒழுங்கான முறையில் தயாராகுதல்.
- ஒரே வகையான pillar இன் Business level பாடங்களை செய்வதற்கு தகுதியுள்ளவராவதற்கு ஒரே வகையான pillar இன் Executive Level பாடத்தை முடித்தல்.
|
Corporate Level Knowledge - பாடங்கள் ( KC1 to KC5 )
|
- பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் ஆண்டில் பதிவை புதுப்பித்தல்.
- Executive மற்றும் business level இன் ஒரே வகையான pillar பாடத்தில் சித்தியடைந்திருத்தல் அல்லது விலக்களிப்புக்களை பெற்றிருத்தல்.
- SB2-Business Information Technology & Systems இல் சித்தியடைந்திருத்தல் அல்லது விலக்களிப்புக்களை பெற்றிருத்தல்.
- SB1-Business Communication & People Skills KC5 - கணிப்பீட்டில்இல் சித்தியடைந்திருத்தல் அல்லது விலக்களிப்புக்களை பெற்றிருத்தல்.
- PE1-Executive Practical Training & Development and PB1-Business Practical Training & Development இல் சித்தியடைந்திருத்தல்.
- கற்கைப் பொதிக்கான கட்டணம் (செலுத்தல் மற்றும் கற்கை பொதியை பெற்றுக்கொள்ளல் வேண்டும்).
- Corporate level பாடங்களை செய்வதற்கு தகுதியுள்ளவராவதற்கு Business level பாடங்கள் முழுவதையும் அல்லது வேறு ஏதாவது இடைக்கால ஏற்பாடுகளை முடித்தல்.
|
KC5-Corporate Strategy & Contemporary Issues - Assignment
|
- பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் ஆண்டில் பதிவை புதுப்பித்தல்.
- Business மற்றும் Corporate Level Knowledge பாடங்கள் - KC1 to KC4 ஆகிய இரண்டையும் வெற்றிகரமாக பூர்த்தி செய்தல்.
|
KC5- Corporate Strategy & Contemporary Issues - Case Study |
- Registration renewal for the exam applying year - பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் ஆண்டில் பதிவை புதுப்பித்தல்.
- KC5-Corporate Strategy & Contemporary Issues - கணிப்பீட்டை வெற்றிகரமாக பூர்த்தி செய்தல்.
|
தகுதிக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால், பதிவு செய்யப்பட்ட மாணவர்களில் நடைமுறை ஆண்டிற்கான ஆண்டுக் கட்டணத்தை செலுத்தியவர்கள் பரீட்சைக்கு தோற்றலாம்.
அவ்வப்போது குறிப்பிட்ட காலங்களில் நிறுவனங்கள் மற்றும் மாகாண நிலையங்களிலிருந்து பெறப்பட்ட பரீட்சைக்கான விண்ணப்ப படிவங்கள் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.
பரீட்சை ஒன்றிற்கான விண்ணப்ப படிவமானது நேரடியாக சென்றோ அல்லது சுய முகவரியிடப்பட்டஇ 23cm 10cm முத்திரை ஒட்டப்பட்ட உறையில் ஒரு எழுத்து வடிவ கோரிக்கையை அனுப்புவதன் மூலம் பெறலாம்:
Manager Examinations
The Institute of Chartered Accountants of Sri Lanka
30 A, Malalasekera Mawatha, Colombo 7.
ஆம், நிறுவனம் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்படுவது தொடர்பாக சிங்கள,தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் அறிக்கைகளை வெளியிடுகின்றது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள்இ சுய முகவரியிடப்பட்ட ஒப்புக்கொள்ளப்பட்ட தபால் அட்டை (முறையாக முத்திரையிடப்பட்ட) வங்கியினால் வழங்கப்படும் Slip மற்றும் 2 சுய முகவரியிடப்பட்ட 23cm x 10cm முத்திரை ஒட்டப்பட்ட உறைகள் என்பன ஒன்றாக பதிவுத்தபாலில் பரீட்சைகள் முகாமையாளருக்கு அவ்வப்போது அறிவிக்கப்படும் முடிவுத் திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னராகவோ சென்றடையும்படி அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
தாமதமான விண்ணப்பம் ஒன்றிற்கான கட்டணம் விண்ணப்ப முடிவுத் திகதியின் பின்னர் அனைத்து தாமதமான விண்ணப்பங்களின் மீதும் அறவிடப்படும். (தாமதமாகும் விண்ணப்பத்திற்கான முடிவுத் திகதி பரீட்சை அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது). அதன் பின்னர் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.
நிறுவனமானது ஒரு ஒப்புக்கொள்ளப்பட்ட தபால் அட்டையை விண்ணப்பதாரிக்கு அனுப்பும்.
- Executive Level - பரீட்சைகள் ஒவ்வொரு வருடமும் மார்ச் மற்றும் செப்டம்பரில் நடைபெறுகின்றது.
- Business and Corporate Level - பரீட்சைகள் ஒவ்வொரு வருடமும் ஜூன் மற்றும் டிசெம்பரில் நடைபெறுகின்றது.
- Corporate level - இற்கான ஊயளந ளுவரனல பரீட்சை ஆண்டுக்கு இரு முறை நடைபெறுகின்றது.
பரீட்சை திகதிகள் பரீட்சை ஆண்டு அட்டவணையில் வெளியிடப்படுகின்றது. பரீட்சை வலைப் பக்கத்திலுள்ள பரீட்சை அட்டவணை பக்கத்தில் நீங்கள் அதனை பார்க்கலாம்.
Executive Level
- விண்ணப்பதாரர்கள் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் விடையளிப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். ஒரு பாடத்திற்கான விடைகள் அனைத்தும் ஒரு மொழி மூலமாகவே இருக்க வேண்டும்.
Business and Corporate Level
- விண்ணப்பதாரர்கள் ஆங்கிலத்தில் மாத்திரம் விடையளிக்க வேண்டும்.
விடைத்தாள்கள்
- வேறுபட்ட நிறங்களில் அச்சிடப்பட்ட விடைப் புத்தகங்கள் மற்றும் துணைப் புத்தகங்கள் பரீட்சைகளில் விடையளிப்பதற்காக விண்ணப்பதாரிகளுக்கு வழங்கப்படும்.
ஆம், விண்ணப்பதாரர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுகின்றார்கள்.
விண்ணப்பதாரர் பரீட்சையை முடிக்காமல் சில பாடங்களில் தேர்ச்சி பெற்றால், அந்த தேர்ச்சிகள் முன்னெடுக்கப்படும்.
இந்த நடைமுறைகளின்படி, பரீட்சைக்கு தோற்றும் தடவைகளின் எண்ணிக்கையில் எவ்வித வரையறையும் இல்லை.
நிறுவனம் பரீட்சை கட்டணங்களை எவ்வித சூழ்நிலைகளின் கீழும் திருப்பிக் கொடுப்பதோ அல்லது வேறு கணக்கிற்கு மாற்றம் செய்வதோ இல்லை.
பரீட்சைகள் கீழ்வரும் இடங்களில் அமைந்துள்ள நிலையங்களில் நடைபெற்றன.
பரீட்சையின் பெயர் | அமைவிடம் |
Executive Level |
கொழும்பு, கண்டி, காலி, இரத்தினபுரி, குருனாகலை, அனுராதபுரம், யாழ்ப்பாணம், மற்றும் கல்முனை. |
Business and Corporate Level |
கொழும்பு, கட்டார் மற்றும் மாலைதீவுகள் |
KC5 - Corporate Strategy & Contemporary Issues - Assignment/Case Study |
கொழும்பு |
SE1 - Executive Communication & People Skills |
கொழும்பு, கண்டி, காலி, குருனாகலை, யாழ்ப்பாணம் |
* விண்ணப்பதாரர் அவருடைய அனுமதி அட்டையில் பெயர் குறிப்பிடப்பட்ட நிலையம் மற்றும் கூடத்தில் பரீட்சைக்கு தோற்ற வேண்டும்.
நிறுவனம் பரீட்சை முடிவுகளை பின்வரும் முறைகளில் வெளியிடும்.
- நிறுவனத்தின் வலைப்பக்கத்தில் விரிவான முடிவுகளை காட்சிப்படுத்துவதன் மூலம்;
- ஒவ்வொரு விண்ணப்பதாரிக்கும் கடிதம் ஒன்றை அனுப்புவதன் மூலம் அவருக்கு /அவளுக்கு விரிவான முடிவுகளை அறிவித்தல்.
ஆம், பரீடசைக்கு தோற்றிய முதற் தடவையிலேயே சித்தியடைந்த மற்றும் அதிகூடிய மொத்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் திறமைச் சித்திக்கான பரிசில்களையும் (Order of Merit Prizes) மற்றும் சான்றிதழ்களையும் பெற தகுதியுடையவர்கள் ஆவர்.
மேலும் ஒவ்வொரு பாடத்திலும் அதிகூடிய புள்ளிகளை தமது முதலாம் முயற்சியில் பெற்ற மாணவர்கள் அந்த பாடத்திற்குரிய பரிசிலை பெறுவதற்கு தகுதி உடையவர் ஆவர்.
கொடுப்பனவு குறியீடு | கொடுப்பனவு விபரங்கள் | கட்டணம் |
EX01
|
Exam Fees Executive Level |
ரூ. 1700 பத்திரம் ஒன்றிற்கு |
EX02 |
Business Level |
ரூ. 3000 பத்திரம் ஒன்றிற்கு |
EX03 |
Corporate Level - KC1 to KC4 |
ரூ. 4500 பத்திரம் ஒன்றிற்கு |
EX05 |
Corporate Level - KC5 |
ரூ. 5000 பத்திரம் ஒன்றிற்கு |
EX07 |
SE1-Executive Communication & People Skills |
ரூ. 2500 |
ஆம், முடிவுத்திகதியின் பின்னர் தாமதமாக விண்ணப்பிப்போருக்கு, தாமதமாக விண்ணப்பிக்கும் முடிவுத் திகதியை பொறுத்து மேலதிகமான ஒரு 50% கட்டணம் அறவிடப்படும்.அதன் பிறகு எந்தவொரு தாமதமான விண்ணப்பங்களும் ஏற்கப்படமாட்டாது.
பரீட்சைப் பிரிவு
தொலைபேசி - 011 2352000 நீடிப்பு. 1017, 1018, 1019 மற்றும் 1020.
மின்னஞ்சல் -
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
எந்தவொரு விண்ணப்பதாரியும் பரீட்சை பிரிவிடமிருந்து தோலைபேசி, மின்னஞ்சல் அல்லது வலை விசாரணை ஊடாக சுட்டிலக்கத்தை பெற்றுக்கொள்ள மாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் தமது அனுமதி அட்டையில் சுட்டிலக்கத்துடன் இருக்கும் பகுதியை வலைத்தளத்தில் பரீட்சை முடிவுகளை பார்ப்பதற்கு பயன்படுத்துவதற்காக பிரித்து பாதுகாப்பாக வைத்திருத்தல் வேண்டும்.
இல்லை, அது சாத்தியமற்ற ஒன்றாகும்.